1. - பெயரியல்

131

   
     (பி - ம்.) 1 ஈரெழுத்தானுமான இம்மூன்று 2 கோவலம், சாணம்3 இடபங்கணம் 4
இடிட்டீபம், தீர்க்கம் 5 அருகன், சிங்கம், மோகம் 6 அஃதேல்

(17)

 

(274)

இடுகுறி காரண மரபோ டாக்கம்
தொடர்ந்து தொழிலல காலந் தோற்றா
வேற்றுமைக் கிடனாய்த் திணைபா லிடத்தொன்
றேற்பவும் பொதுவு மாவன பெயரே.

     எ - ன், இவ்வதிகாரத்துட் சொல்லுணர்த்துவான் எடுத்துக்கொண்டு ஒருவகையான்
அச்சொல்லாவது இன்னதென்பதும் அதன் பகுதியும் அதற்கு ஆதாரமானபொருளும்
பொருட்கூறும் அவற்றை உணர்த்துமிடமும் உணர்த்தும் பகுதியு முரைத்துப் பின்னும்
அதனையே பெயர்முதலாக வகுத்தும் விரித்தும் உணர்த்துவான்தொடங்கினார்.
அவற்றுள், இச்சூத்திரம் பெயர்க்குப்பொதுவிதியும் அதன் பகுதியுமுணர்த்துதல்
நுதலிற்று.

     (இ - ள்.) தனித்தும் தொகுத்தும் மறைத்தும் வழங்குதற் பொருட்டு
இதற்கிதுபெயரென்று இட்ட இடுகுறியும், பொருளாதி ஆறும் கருத்தாவும் மிகவுமான
1காரணமும், வரலாறானகாரணமும் ஒன்றன்பெயரை ஒன்றற்கு ஆக்கலும் ஆகும்
இந்நான்குபகுதியையும்பற்றி, வினைநிமித்தமாக வரும் பெயரொன்றும் காலங்காட்ட
அல்லன காலங்காட்டாவாய் எட்டு வேற்றுமையுஞ்சார்தற்கு இடனாய்த்
திணைபாலிடங்களில் ஒன்றற்குரியவாயும் பலவற்றிற்குரியவாயும் வருவன, பெயர்களாம்
எ - று.

     மரபுப்பெயரும் ஆகுபெயரும் காரணப்பெயருள் அடங்குமேனும், முதலது
இடுகுறியாயமரபு காரணமாகவும், ஆகுபெயர் பகுதி விகுதியாய்க் காரணம்
விளக்காததாகவும் வருதலின், அவ்வேறுபாடறிதற்கு வேறோதினாரென்க.

     வ - று. சாத்தன், கொற்றன், கூத்தன், கெத்தன், நாகன், தேவன், பூதன், தாழி,
கோதை, முட்டை, பொன்னன் என்றற்றொடக்கத்தன தனித்துவழங்கிடுகுறி. சனம், படை,
சேனை, நிரை, தொறு, உலகு, நாடு, ஊர் என்றற்றொடக்கத்தன தொகுத்துவழங்கிடுகுறி.
இடக்கரடக்கல் முதலான மூன்றுவழக்கும் மறைத்துவழங்கிடுகுறி.

     குழையன், கோலன், வில்லி, வாளி, பொன்னன், பூணன் எ - ம், வெற்பன்,
நாடன், ஊரன், சேர்ப்பன், வானன், நிலத்தன், அகத்தன், புறத்தன் எ - ம், காரான்,
கூதிரான், ஐயாட்டையான், அறுதிங்களான், ஆதிரையான் எ - ம், நெடுமூக்கன்,
தாழ்காதன், குழலன், தோளன், கூனன், குருடன், கொம்பன், வாலன் எ - ம், அறிவன்,
புலவன், சிறியன், பெரியன், செய்யான், கரியான், கடியான், இனியான், சேயனான்
ஏறனான் எ - ம், உழவன், வாணிகன், ஒற்றன், தூதன், உண்டான், உறங்கினான்,
வருகின்றான், போகின்றான், காப்பான், கடிவான் எ - ம், வள்ளுவப்பயன், குயக்கலம்,
தொல்காப்பியம்எ - ம், கமுகந்தோட்டம், காரைக்காடு எ - ம் முறையே எண்வகைக்
காரணப்பெயரும் வந்தவாறு.