132

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
தேவன், தேவி, மகன், மகள், மக்கள், மாந்தர், மைந்தர், ஆடூஉ, மகடூஉ, நாகன், நாகி,
யானை, குதிரை, ஆமா, நாய், நரி, மயில், குயில், பொன், மணி, மரம், பனை, தெங்கு,
நீர், வளி, நெருப்பு எ - ம், வான், நிலம், அகம், புறம், கீழ், மேல், குழி, அவல் எ -
ம், ஊழி, யாண்டு, அயனம், இருது, மதி, பக்கம், நாள், இரா, பகல், யாமம், நாழிகை,
மாத்திரை எ - ம், கை, கால், தலை, சினை, தளிர், பூ, காய் எ - ம், வட்டம், சதுரம்,
குறுமை, நெடுமை, கருமை, சிவப்பு, தண்மை, வெம்மை, கைப்பு, இனிப்பு, புளிப்பு,
விரை, மணம், உண்மை, இன்மை, நன்மை, தீமை, வன்மை, மென்மை எ - ம், 2ஊண்,
தீன், உணல், தினல், உணப்படல், தினப்படல், ஏவப்படல், 3உணப்பாடு, தினப்பாடு
எ-ம் வரும் இத்தொடக்கத்தன பொருளாதி அறுபொருளிடுகுறி மரபுகாரணப்பெயர்.
அவன், அவள், அவர்; அந்நிலம், அந்நாள், அக்கை, அக்குணம், அவ்வூண் எ - ம்,
எவன், எவள், எவர்; எந்நிலம், எந்நாள், எக்கை, எக்குணம், எவ்வூண் எ - ம் இவ்வாறு
அவை சுட்டு வினாக்களடுத்தும்வரும்; ஏனைச் சுட்டு வினாக்களோடும் இப்படியே
ஒட்டுக.

     தெங்கு கடு என்றற்றொடக்கத்தன ஆகுபெயர்; அவை முன்னர்க் காட்டுதும்.

     இவற்றுள்ளும் சாத்தையுடையான் சாத்தன்; பொன்னையுடையான்
பொன்னனெனக்கொள்ளின் அவை காரணப்பெயராமென்க.

     சங்கரன், அருகன், நான்முகன், நாராயணன், தேவன், தேவி என்னும்
இத்தொடக்கத்தனவாகிய காரணப்பெயர், மக்கட்காயினும் விலங்குகட்காயினும்வரின்,
இடுகுறிப்பெயராமென்க. அகலம் உரையிற்கொள்க.

     (பி - ம்.) 1 காரணமுமரபால்வருங்காரமும் 2 உண், தின், உணல்3 உண்பாடு,
தின்பாடு

(18)

 

(275)

அவற்றுள்,
கிளையெண் குழூஉமுதற் பலபொரு டிணைதேம்
ஊர்வா னகம்புற முதல நிலன்யாண்
டிருது மதிநா ளாதிக் காலம்
 

5

தோள்குழன் மார்புகண் காது முதலுறுப்
பளவறி வொப்பு வடிவு நிறங்கதி
சாதி குடிசிறப் பாதிப் பல்குணம்
ஓத லீத லாதிப் பல்வினை
இவையடை சுட்டு வினாப்பிற மற்றோ
 

10

டுற்ற னவ்வீறு நம்பி யாடூஉ
விடலை கோவேள் குருசி றோன்றல்
இன்னன வாண்பெய ராகு மென்ப.

     எ - ன், மேல், “ஒன்றேற்பவும்” என்றார், அவற்றுள் ஆண்பாற் குரிய
பெயருணர்த்தல்நுதலிற்று.