1. - பெயரியல்

133

   
     (இ - ள்.) மேற் பொதுவகையாற் சொல்லியபெயர்களுள், நான்கு கிளையும்
எண்ணும் திரளும் முதலான பலபொருளையும், குறிஞ்சி பாலை முல்லை மருதம்
நெய்தலென்னும் ஐந்திணையையும், தேசமும் ஊரும் வானும் அகமும் புறமும் முதலாகிய
நிலத்தையும், யாண்டும் பருவமும் திங்களும் நாளுமுதலான காலத்தையும், தோளும்
குழலும் மார்பும் கண்ணும் காதும் முதலான உறுப்பையும், அளவும் அறிவும் ஒப்பும்
வடிவும் நிறனும் கதியும் சாதியும் குடியும் சிறப்பும் முதலான பண்பையும், ஓதலும்
ஈதலும் முதலான பலதொழிலையும் இவற்றைப்பொருந்திவரும் மூன்று சுட்டையும்,
மூன்று முதல்வினாவையும், பிறவென்பதனையும், மற்றென்பதனையும் பொருந்தி
னகரத்தை ஈறாகக்கொண்டு வரும் பெயர்களும், நம்பியென்பதும், ஆடூஉ வென்பதும்,
விடலையென்பதும், கோவென்பதும், வேளென்பதும், குருசி லென்பதும்,
தோன்றலென்பதும் இவைபோல்வன பிறவுமான பெயர்களும் ஆண்பாற்குரிய
பெயர்களாமென்று சொல்லுவர் புலவர் எ - று.

     ஆண்பாற்கெனவே உயர்திணையென்பதும் ஒருமையென்பதும் தானே விளங்கும்.
மேல்வருவனவற்றிற்கும் இவ்வுரை ஒக்கும்.

      “தநநு, எகர முதலா 1மகர மிடையிட்டு, னளரவா மீற்றின சுற்றப் பெயரே”
என்பதனாற் கிளைப்பெயரறிக.

     வ - று. தமன், நமன், நுமன், எமன் எ - ம், ஒருவன் எ - ம், அவையத்தான்,
அத்திகோசத்தான், சங்கத்தான் எ - ம், பொருளன், பொன்னன், முடியன் எ - ம்
வருமிவை பொருள்தொடர்ந்தன. வெற்பன், பொருப்பன், சிலம்பன், நாடன், கானவன்,
குறவன் எ - ம், எயினன், மறவன், வேடன் எ - ம், புறவன், பொதுவன், அண்டன்,
ஆயன் எ - ம், மகிழ்நன், ஊரன், வினைஞன், களமன் எ - ம், கொண்கன், சேர்ப்பன்,
துறைவன், படவன், பரவன், பரதவன், நுளையன் எ - ம், அருவாளன், சோழியன்,
கொங்கன், கன்னடன், கலிங்கன், தெலிங்கன் எ - ம், கருவூரான், மதுரையான்,
கச்சியான், கோழியான், மருவூரான் எ - ம், வானான், அகத்தான், புறத்தான்
எ - ம், நிலத்தான், பிலத்தான் எ - ம் வரும் இவை இடம் தொடர்ந்தன.
ஈராட்டையான், மூவாட்டையான், எ - ம், காரான், கூதிரான் எ - ம், தையான்,
மாசியான் எ - ம், மூலத்தான், பூசத்தான், ஓணத்தான் எ - ம், நெருநலான்,
இற்றையான், முற்காலத்தான், இக்காலத்தான் எ - ம் வரும் இவை காலம் தொடர்ந்தன.
திணிதோளன், சுரிகுழலன், வரைமார்பன், செங்கண்ணன், அலைகாதன், எ - ம்,
குருடன் எ - ம் வருமிவை சினைதொடர்ந்தன. பெரியான், சிறியான் எ - ம், அறிவன்,
புலவன் எ - ம், பொன்னொப்பான், மணியொப்பான் எ - ம், கூனன், குறளன் எ - ம்,
கரியான், செய்யான் எ - ம், மகன், மானிடவன், தேவன், நரகன் எ - ம், அரசன்,
அந்தணன், வணிகன், வீரணுக்கன், கைக்கோளன், கணவாளன் எ - ம், சேரன், சோழன்,
பாண்டியன், கங்கன், 2கட்டிமான், காடவன், கோனூர்கிழான், தேனூர்கிழான்,
அம்பர்கிழான், வல்லங்கிழான், 3அரசூருடையான், பழையனூருடையான் எ - ம்,
ஆசிரியன், படைத்தலைவன், சேனாவரையன் எ - ம் வருமிவை பண்புதொடர்ந்தன.
ஓதுவான், 4ஈவான் எ - ம், உண்பான்,