134 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | உறங்குவான், கணக்கன், பிணக்கன், திருடன் எ - ம் வருமிவை தொழில் தொடர்ந்தன. அவன், அவ்வழியான், அந்நாளான், அக்குழலான், அக்கரியான், அக்கூத்தனென அகரச்சுட்டுடன் பொருளாதியாறும் தொடர்ந்தன. ஏனைச்சுட்டுவினாக்களினும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. பிறன், மற்றையான், பிறவிடத்தான், மற்றையிடத்தான்; இவ்விரண்டோடும் ஏனைநான்கிடத்தும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. சுட்டுமுதலாயின எப்பொருளினும் அடுத்துவருதலின், வேறோதினாரென்க.
பொருளாதியாறுவகையினும், ‘முதல்’, ‘ஆதி’ என்று சொன்னமை யான், அவற்றிற்கு வரும் பகுதிகளும் அவற்றின்பரியாயச் சொற்களும் கொள்க.
இறுதிக்கண், ‘இன்னன’ என்றதனால், வில்லி, வாளி, மீளி, குடுமி, சென்னி, கிள்ளி, செட்டி, கொற்றந்தை, சாத்தந்தை, வடுகந்தை, சேய், ஏந்தல் என்றற்றொடக்கத்தனவும், சுட்டுநீண்டு ஆண்டையான், ஆங்கணான், ஆயிடையானென வருவனவும், ஏனைச் சுட்டுவினாக்களில் இவ்வாறுவருவனவும் பிறவும் கொள்க.
இப்படாம் 5பட்டணவன், இக்குதிரை சோனகன், இவ்வியானை 6பப்பரவன் என்பனவும், அருமணவன், சாத்தன், கொற்றன், வலியான், வயான், கலுழன், அலவன், கருடன், இகலனென்றற்றொடக்கத்தனவும் 7உயர்திணையாக 8ஓதாமையான் உயர்திணை ஆணொருமைப்பால் ஆகாவென்க.
(பி - ம்.) 1 மகரவிடைநிலையிட்டு, னளரவாலிற்றன சுற்றப் 2 கட்டி மான், காட்டுவன், கோனுழான், தேனுழான் 3 அரசுடையான் 4 ஈகையன், ஊணன், தீனன், உறங்குவான் 5 பட்டினவன் 6 பப்பூவன் 7 உயர்திணைப்பாலன்மையின் ஓதிற்றிலர் 8 ஓதாதலால் | (19) | | (276) | கிளைமுத லாகக் கிளந்த பொருள்களுள் ளவ்வொற் றிகரக் கேற்ற வீற்றவும் தோழி செவிலி 1மகடூஉ நங்கை தையலோ டின்னன பெண்பாற் பெயரே. | எ - ன், பெண்பாற்குரியபெயர் இவையென்பது உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) மேற் கிளைமுதலாகச் சொல்லப்பட்ட பொருட்பகுதிகளுள், ளகரவொற்றிற்கும் இகரத்திற்குமேற்ற ஈற்றான்வருவனவும், தோழி செவிலி மகடூஉ நங்கை தையலென்பவற்றுடனே இவைபோல்வன பிறவும் பெண்பாற்குரிய பெயர்களாம் எ - று.
‘ஏற்றவீற்றவும்’ என்றது, இவற்றுள்ளும் ளவ்வொற்றேற்பன சிலவும் இகரமேற்பனசிலவும் ஒன்றே இரண்டும் ஏற்பனசிலவும் இரண்டும் ஏலாதனசிலவுமாமென்றற்கெனக் கொள்க.
வ - று. தமள், நமள், நுமள், எமள், அவையத்தாள், அத்திகோசத்தாள், சங்கத்தாள், பொருளாள், பொன்னாள், முடியாளென இவ்வாறே | |
|
|