ளகாரவீற்றிற்கு ஏற்பனவறிந்து ஒட்டுக. ஒருத்தி, குறத்தி, எயிற்றி, மறத்தி, உழத்தி, ஆய்ச்சி, பரத்தி, கிழத்தி, அருவாட்டி, சோழிச்சி, கொங்கிச்சி, கன்னடிச்சி, கலிங்கிச்சி, தெலிங்கிச்சி, மானிடத்தி, தேவி, நரகி, அரசி, வீரணுக்கிச்சி, கைக்கோளிச்சி, கணவாட்டி, 3கோனூர்கிழத்தி, தேனூர்கிழத்தி, அம்பர்கிழத்தி, வல்லங்கிழத்தி, அரசூருடைச்சி, பழையனூருடைச்சி, படைத்தலைவி, சேனாவரசி, கணக்கிச்சி, 3வெள்ளாட்டிச்சி, பிணக்கிச்சி, திருடி என்பன இகரமேற்றன. திணிதோளாள் திணிதோளி, சுரிகுழலாள் சுரிகுழலி, செங்கண்ணாள் செங்கண்ணி, அலைகாதாள் அலைகாதி, கூனாள் கூனி என்பன இரண்டீறும் ஏற்றன. வெற்பன் நாடன் சிலம்பன் சேர்ப்பனென்றற்றொடக்கத்தினசில இரண்டீறும் ஏலாவாயின.
‘இன்னன’ என்றதனான், இகுளைமுதலாயின கொள்க. பருவப்பெயரான பேதைமுதலேழும் காலப்பெயருள் அடங்குமெனக் கொள்க.
கோள், தோள், தேள், நாளென்றற்றொடக்கத்தன உயர்திணையன்மையின், ஈண்டைக்கு ஏலாவென்க.
(பி - ம்.) 1 மகடூநங்கை 2 (1) கோனுழத்தி, (2) கோனுழைச்சி 3 வெள்ளாடிச்சி | (2) | | | (277) | கிளந்த கிளைமுத லுற்றரவ் வீற்றவும் கள்ளெ னீற்றி னேற்பவும் பிறவும் பல்லோர் பெயரின் பகுதி யாகும். | எ - ன், பலர்பாற்பெயராவன உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) கிளைமுதலாகச் சொல்லப்பட்ட பொருளனைத்தினையும் பொருந்திவந்த ரகாரவொற்றை ஈறாகவுடைய மொழிகளும், அப்பொருளிற் கள்ளென்னும் விகுதியை ஈறாகவுடைய மொழிகளுள் ஈண்டைக்குப் பொருந்துவனவும் இவைபோல்வன பிறவும் பல்லோர்பாற்குரிய பெயர்களாம் எ - று.
இவற்றிற்கு உதாரணம் ஆண்பாற்பெயர்க்கு மேற்காட்டிய உதாரணங்களை ரகரவீறாகத்திரித்து, தமர் நமர் நுமர் எமரென இவ்வாறே ஒட்டிக் காண்க.
கள்ளீற்றுப்பெயர்கள்: அடிகள், முனிகள், மனுக்கள், கோக்கள், வேள்கள், விடலைகள், வில்லிகள், வாளிகள், பள்ளிகள், 1கணிகள், மயரிகள், மடந்தைகள், பரத்தைகள், உழத்திகள், மறத்திகள், குறத்திகள், வலைச்சிகள், புலைச்சிகளென்றற்றொடக்கத்தன. ‘பிறவும்’ என்றதனால், வேறு வருவன உளவேனும் கொள்க; அவர்கள், அரசர்கள், பார்ப்பார்கள், உண்டவர்கள், உறங்கினவர்களென்றற்றொடக்கத்தன 2ரகாரவொற்றும் கள்ளென்னும் விகுதியும் கூடிவந்தாலும் முதனின்ற ரகாரவொற்றே பால் விளக்கும்; ஏனையது 3வாய்பாடு நிரம்பல்மாத்திரையேயாவதல்லது பாலுணர்த்தாதென்க;
இவ்வுரை: உண்டார்கள், உண்ணாநின்றார்கள், உண்பார்கள்; உண்ணார்கள்; உறங்கினார்கள், உறங்காநின்றார்கள், உறங்குவார்கள்; | |
|
|