| 136 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | உறங்கார்கள் எ - ம், வில்லினர்கள், ஆண்டையர்கள், நாளினர்கள், கையினர்கள், கரியர்கள், செலவினர்கள் எ - ம் வரும் வினைக்கும் வினைக்குறிப்பிற்கும் ஒக்கும்.
நாய்கள், நரிகளென்றற்றொடக்கத்தன உயர்திணையன்மையின், ஈண்டைக்கேலாவென்க.
(பி - ம்.) 1 கன்னிகள், வயிரிகள், மடந்தைகள். 2 ரகரவொற்றின் மேல் அக்கள்ளென்விகுதியும் 3 வாய்பாடன்று நிரம்பல் | (21) | | | (278) | வினாச்சுட் டுடனும் வேறு மாம்பொருள் ஆதி யுறுதுச் சுட்டணை யாய்தம் ஒன்றெனெ ணின்னன வொன்றன் பெயரே. | எ - ன், நிறுத்தமுறையானே அஃறிணை யொருமைப் பெயராவன உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) மூன்றுமுதல்வினாவையும் மூன்றுசுட்டையுமடுத்தும் அடாதும்வரும் பொருளாதியாறினையுமுற்ற துவ்வீற்றுமொழிகளும், மூன்று சுட்டையுமணைந்த ஆய்தமடுத்தமொழிகளும், ஒன்றென்னுமெண்ணும், இவைபோல்வனபிறவும் அஃறிணையொருமைப்பாற் பெயர்களாம் எ - று.
வ - று. எது, எவ்விடத்தது, எந்நாளது, எக்கோட்டது, எந்நிறத்தது, எந்நடையது எனவரும். இவ்வாறே ஏனை 1வினாக்களுடனும் மூன்று சுட்டுக்களுடனுமொட்டிப் பொருளாதியாறும் வினாச்சுட்டுக்களுடன் துவ்வீறாகிவந்தவாறு காண்க. ஏகாரவினா இடமுதல் ஐந்தினும், யாவினாக் காலமுதல் நான்கினும் வருதல் அரியதெனக்கொள்க. குழையது, நிலத்தது, மூலத்தது, வாலது, குறியது, ஆடலது எனப் பொருளாதியாறும் தனியே துவ்வீறாகி வந்தவாறு. அஃது இஃது உஃது எனச் சுட்டணையாய்தப்பெயர் வந்தவாறு. ஒன்று என எண் வந்தவாறு. ‘இன்னன’ என்றதனால், பிறிது மற்றையது என்றற்றொடக்கத்தனவும் கொள்க.
(பி - ம்.) 1 (1) வினாச்சுட்டுக்களுடனொட்டியும்,(2) வினாச்சுட்டுகளினுமொட்டி | | | (279) | முன்ன ரவ்வொடு வருவை யவ்வும் சுட்டிறு வவ்வுங் கள்ளிறு மொழியும் ஒன்ற லெண்ணு முள்ள வில்ல பல்ல சில்ல வுளவில பலசில 1 இன்னவும் பலவின் பெயரா கும்மே. | எ - ன், அஃறிணைப்பன்மைப் பெயராவன உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) மேல் அஃறிணையொருமைப்பாற்கு 2ஓதிய பெயர்களின் மேலேவரும் வையீற்றுமொழிகளும், அகரவீற்றுமொழிகளும், சுட்டோடு கூடிய வகரவீற்றுமொழிகளும், கள்ளென்னும்விகுதியை ஈறாகக்கொண்டு வரும் பெயர்களும், ஒன்றென்பதனை யொழித்த எல்லாவெண்ணும், உள்ள | |
|
|