1. - பெயரியல்

137

   
வென்பதுமுதலான எட்டும், இவைபோல்வன பிறவும் அஃறிணைப்பன்மைப் பாற்குரிய
பெயர்களாம் எ - று.

     வ - று. எப்பொருளவை, எவ்விடத்தவை, எந்நாளவை, எக்கோட்டவை,
எந்நிறத்தவை, எந்நடையவை எ - ம், எப்பொருள எப்பொருளன, எவ்விடத்த
எவ்விடத்தன, எந்நாள எந்நாளன, எக்கோட்ட எக்கோட்டன, எந்நிறத்த எந்நிறத்தன,
எந்நடைய எந்நடையன எ - ம் வரும். இவ்வாறே 3ஏனைவினாக்களுடனும் மூன்று
சுட்டுக்களுடனும் ஒட்டிப் பொருளாதியாறும் வினாச்சுட்டுக்களுடன் வையீறும்
அகரவீறுமாய் வந்தவாறுகாண்க. அவ், இவ், உவ் எ - ம், நிலங்கள், நீர்கள், மரங்கள்,
நாய்கள், நரிகள், மஞ்ஞைகள், கிள்ளைகள் எ - ம், இரண்டு, பத்து, நூறு, ஆயிரம்
எ - ம், உள்ள, இல்ல, பல்ல, சில்ல, உள, இல, பல, சில எ - ம் வந்தவாறு காண்க.
‘இன்னவும்’ என்றதனால், உள்ளவை, இல்லவை, நல்லவை, தீயவை, மற்றையவை,
மற்றையன, மற்றைய, பிற என்றற்றொடக்கத்தனவும் கொள்க.

     (பி - ம்.) 1 இன்னன 2 எய்திய 3 ஏனைவினாச்சுட்டுக்களிலும்

(23)

 

(280)

பால்பகா வஃறிணைப் பெயர்கள்பாற் பொதுமைய.

     எ - ன், அஃறிணைப்பெயர்க்கு ஆவதோர் விதியுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) அஃறிணைப்பெயர்களுள், மேற் பால் பகுத்துரைத்தவையொழித்து
ஒழிந்த பெயர்களனைத்தும் ஒருமைபன்மைகட்குப் பொதுவாய் நிற்பனவாம் எ - று.

     வ - று. மரம்வளர்ந்தது மரம்வளர்ந்தன, மாவந்தது மாவந்தன எனக் காண்க.

(24)

 

(281)

முதற்பெயர் நான்குஞ் சினைப்பெயர் நான்கும்
சினைமுதற் பெயரொரு நான்குமுறை யிரண்டும்
தன்மை நான்கு முன்னிலை யைந்தும்
எல்லாந் தாந்தா னின்னன பொதுப்பெயர்.

     எ - ன், இருதிணைக்குமுரிய பெயருணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) முதற்பெயர்முதலான ஒன்பது கூற்றுப்பெயர்களும் இருதிணைக்கும்
பொதுவான பெயர்களாம் எ - று.

     ‘பெயர்’ என்பதனை, ‘முறையிரண்டும்’ என்பதுமுதல் எல்லாவற் றோடும்
கூட்டியுரைக்க.

(25)

 

(282)

ஆண்மை பெண்மை யொருமை பன்மையின்
ஆமந் நான்மைக ளாண்பெண் முறைப்பெயர்.

     எ - ன், மேல் தொகைப்படுத்துரைத்தபெயர்களை, 2 வகைப்படுத்து உணர்த்துதல் நுதலிற்று.