138

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     (இ - ள்.) ஆண்மைப்பெயர்முதலான நான்கினானே மேற்சொன்ன முதற்பெயர்
முதலான மூன்றுள் ஒவ்வொன்றும் நந்நான்காம்; ஆண்மை 2 பெண்மையானே
முறைப்பெயர் இரண்டாம் எ - று.

     என்றது : ஆண்மைமுதற்பெயர், பெண்மைமுதற்பெயர், ஒருமை முதற்பெயர்,
பன்மைமுதற்பெயர் எ - ம், ஆண்மைச்சினைப் பெயர், பெண்மைச்சினைப்பெயர்,
ஒருமைச்சினைப்பெயர், பன்மைச்சினைப்பெயர் எ - ம், ஆண்மைச்சினைமுதற்பெயர்,
பெண்மைச்சினைமுதற்பெயர், ஒருமைச்சினைமுதற்பெயர், பன்மைச்சினைமுதற்பெயர்
எ -ம், ஆண்மைமுறைப்பெயர், பெண்மைமுறைப்பெயர் எ - ம் வருமென்றவாறு.
ஏனையபோக்கிச்சொல்லுதும்.

     வ - று. சாத்தன், சாத்தி, கோதை, யானை இவை முதற்பெயர்; யானையென்பது
எல்லாவற்றிற்குமுரித்து. முடவன், முடத்தி, செவியிலி, நெடுங்கழுத்தல் (ஒட்டகம்) இவை
சினைப்பெயர். முடக்கொற்றன், முடக்கொற்றி, கொடும்புறமருதி, 3பெருங்கால்யானை
இவை சினைமுதற்பெயர். தந்தை, தாய் இவை முறைப்பெயர். பிறவும்
இவ்வாறறிந்துகொள்க.

     (பி - ம்.) 1 வகுத்துணர்த்துதல் 2 பெண்மையான 3 நெடுந்தாள்யானை

(26)

 

(283)

1அவற்றுள்,
ஒன்றே யிருதிணைத் தன்பா லேற்கும்.

     எ - ன், மேல் 2 ஆண்மை முதற்பெயர்முதலாக வகுத்தவற்றை
இருதிணைப்பாலுள்ளும் இன்னது இன்னபாற்குரித்தென்பது உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) ஆண்மைமுதற்பெயர்முதலாகச் சொல்லப்பட்ட இப்பதினாலுள்ளும்
ஒருபெயரே இருதிணையிடத்துவரும் தன்பாலனைத்தையும் விளக்கும் எ - று.

     வ - று. அவை : சாத்தன், முடவன், முடக்கொற்றன், தந்தை யென்பன வந்தான்,
வந்தது எ - ம், சாத்தி, முடத்தி, முடக்கொற்றி, தாய் என்பன வந்தாள், வந்தது எ - ம்,
கோதை, செவியிலி, கொடும்புறமருதி யென்பன வந்தான், வந்தாள், வந்தது எ - ம்,
யானை, நெடுங்கழுத்தல், பெருங்கால்யானை யென்பன வந்தான், வந்தாள், வந்தது,
வந்தன எனவும் வரும்.

     (பி - ம்.) 1 இவற்றுள் 2 ஆண்மைபெண்மைமுதலாக

(27)

 

(284)

தன்மை யானான் யாநா முன்னிலை
எல்லீர் நீயிர் நீவிர் நீர்நீ
அல்லன படர்க்கை யெல்லா மெனல்பொது.

     எ - ன், மேல் “தன்மை நான்கு முன்னிலை யைந்தும்” என்றார், அவை
இவையென்பதும், ஏனைப்பெயர்கள் எவ்விடத்தவாங்கொலென்னும் ஐயமறுத்தலும்
உணர்த்துதல் நுதலிற்று. அன்றி, 1 எல்லாப்பெயர்க்கும் இடமடைத்தல்
நுதலிற்றெனினுமமையும்.