1. - பெயரியல்

139

   
     (இ - ள்.) தன்மைக்குரியபெயர்கள் யானென்றும், நானென்றும் யாமென்றும்,
நாமென்றும்வரும் நான்குமாம். முன்னிலைக்குரிய பெயர்கள் எல்லீரென்றும்,
நீயிரென்றும், நீவிரென்றும், நீரென்றும், நீயென்றும்வரும் ஐந்துமாம். இவையொழிந்த
பெயர்களெல்லாம் படர்க்கையிடத்திற்குரியபெயர்களாம். அவற்றுள்,
எல்லாமென்னும்பெயர் மூவிடத்திற்கும் உரித்தாம் எ - று.

     தன்மைக்கும் முன்னிலைக்குமுதாரணம் உரைக்கிடையிற்காண்க; படர்க்கைக்கு
உதாரணம் மேற்காட்டினவற்றுட்காண்க.

     தன்மை 2உயர்திணைக்கேயன்றி அஃறிணைக்கும் உரித்தாமோ வெனின்,
“பேய்பூத மந்தி கிளிபூவை பேசுதலா லாகுமே தன்மை பொது” என்பதனால்,
ஆமென்க.

     வ - று. “நுமரெங்குந் தீதின்றி நும்மையான் காப்பேன், அமரெங்கு நாட்டி
யரும்பிணந் தின்பேன், 3புணரங்கி யென்பதென் புல்லிய மெய்ப்பேர், நமரங்காள்
பேணுமி னன்கென் றதுவே” (இ. வி. சூ. 187, உரை), “மூன்றைந்தின் மூன்றிட்ட
மொய்கொள் கணங்களுட், டோன்றல பூதமென் றோற்றந் 4தெரியல” இ. வி. சூ. 187,
உரை), 5 “ஈங்கினியென்னை நோக்கி யென்செய்தி யெனக்கு வாழ்நாள், நீங்கிற்றுச்
சிறிது நிற்பிற் காண்டியா னீயு 6மென்னத், தூங்கித்தான் றுளங்கி மந்தி தொழுத்தை
7யேன் செய்த தென்று, தாங்குபு தழுவிக் கொண்டு தன்னைத் தான் பழித்த தன்றே”
(சீவக. 2723), “பூவையுங் கிளியுங் கேட்டுப் புழை 8முகம் வைத்து நோக்கிக், காவலன்
மடந்தை 9யுள்ளங் கற்கொலோ விரும்பு கொல்லோ, 10சாவம்யா முருகி யொன்றுந்
தவறிலா 11னருளு நங்கை, பாவையென் றிரத்து மென்ற பறவைக டம்முட் டாமே”
(சீவக. 2510) எனவரும்.

     (பி - ம்.) 1 எல்லாமென்னும்பெயர்க்கு 2 உயர்திணைக்குரித்தாமன்றி 3 புனரங்கி 4
திரியிலென் 5 ஈங்குநீ யெம்மைநோக்கி யென்செய்தா யெமக்கு வாழ்நா ணீங்கின6
மென்று 7(1) யென்செய்கேனென்று; (2) யென் செய்வதென்று 8முகம்புதைத்துநோக்கிக்
9நெஞ்சங்கற் 10யாவதுமுருகாதென்றுந் 11னருளுஞ்செம்பொற் பாவையென்றரற்றுமென்ற

(28)

 

(285)

வினையின் பெயரே படர்க்கை வினையா
லணையும் பெயரே யாண்டு மாகும்.

     எ - ன், எய்தியதுவிலக்கிப் பிறிதுவிதிவகுத்தல் நுதலிற்று.

     (இ - ள்.) தொழில்தன்னைச் சொல்லும்பெயர் படர்க்கையாம்;
தொழிலாலாகும்பெயர்கள் 1மூவிடத்தும் ஆவனவாம் எ - று.

     வ - று. உணல், தினல், வரவு, செலவு, கூத்து, பாட்டு, உறங்கல், போதல்,
வருதல், நிற்றல், இருத்தலென்றற்றொடக்கத்தன, நன்று, தீது என்றற்றொடக்கத்து
முற்றுவினைக்குறிப்புக்கொண்டு முடிதலிற் படர்க்கைப் பெயராயின. வந்தான், வந்தாள்,
வந்தார், வந்தது, வந்தன எ - ம், வந்தேன், வந்தேம் எ - ம், வந்தாய், வந்தீர் எ - ம்
வருமிவை வந்தானை, வந்தான்