14

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   

சிறப்புப்பாயிரம் பிறர்செய்தற்குக் காரணம்

(51)

தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும்
தான்றற் புகழ்த றகுதி யன்றே.
     (இ - ள்.) நூல்செய்தோன் பாயிரஞ்செய்தல் இயல்பன்று எ - று.

(51)

 

(52)

மன்னனுடை மன்றத் தோலைத் தூக்கினும்
1 தன்னுடை யாற்ற லுணரா ரிடையினும்
2 மின்னிய வவையிடை வெல்லுறு பொழுதினும்
தன்னை மறுதலை பழித்த காலையும்
 

5

தன்னைப் 3புகழ்தலுந் தகும்புல வோற்கே.
     (இ - ள்.) 4 நூல்செய்தோன் பாயிரஞ்செய்யிற் றன்னைப்புகழ்ந் தானாம்; ஆகவே
தன்னைப்புகழ்தல் தகுதியன்றென்றார்; ஈண்டுச் சொன்ன 5 இடங்களினாயின், தன்னைப்
புகழ்தலும் தகும் எ - று.
     இவ்விரண்டு சூத்திரமும் * 6 பனம் பாரம்.
     (பி - ம்.) 1 தன்னிடை 2 மன்னிய 3 புகழ்வதும் 4 மேல்நூல்செய்தவன் 5
இடங்களிற்றன்னை 6 பனம்பாரனார்; பனம்பாரனம்; பன்னிபாரம்.

(52)

பாயிரம் நூற்கு இன்றியமையாததென்பது

 

(53)

ஆயிர முகத்தா னகன்ற தாயினும்
பாயிர மில்லது பனுவ லன்றே.
     (இ - ள்.) அளவிறந்த இடத்ததாய்ப் பரந்ததாயினும் பாயிரமில்லாதது நூலன்று
எ - று.
     ஈண்டுப் பாயிரமென்றது சிறப்புப்பாயிர மென்றுணர்க.

(53)

 

(54)

மாடக்குச் சித்திரமு 1 மாநகர்க்குக் கோபுரமும்
ஆடமைத்தோ ணல்லார்க் கணியும்போல் - நாடிமுன்
ஐதுரையா நின்ற 2 வணிந்துரையை யெந்நூற்கும்
பெய்துரையா வைத்தார் பெரிது.
     எ - ன். இஃது அச்சிறப்புப்பாயிரத்தைச் சிறப்பித்ததெனக் கொள்க.

      அஃதேல் நூல்கேட்கப்புகுந்தார்க்குப் புறவுரைகேட்டுப் பயன்
என்னையோவெனின்,கொழுச்சென்றவழித் துன்னூசி இனிது செல்லுமாறுபோலப்
பருப்பொருட்டாகிய பாயிரங்கேட்டார்க்கு நுண்பொருட்டாகிய நூல் இனிது
விளங்குமென்பதனாலும், 3‘சிலவெழுத்தினானியன்ற நூற்கு இன்றியமையாத
பாயிரமறியாதாய்!