140

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
கண் என 2உருபேற்றலின், வினைப்பெயராய் மூவிடத்திற்கும் உரியவாயின. பிறவுமன்ன.
இவை பெயராயினபொழுது 3உருபேற்றுநிற்கும்; வினையாயின பொழுது பொருண்முற்றிப்
பெயர்கொண்டுமுடியும். இது தம்முள் வேற் றுமையெனக்கொள்க.

     (பி - ம்.) 1 மூவிடத்திற்குமாவனவாம். 2 உருபேற்றுவினைப்3 உருபேற்கும்

(29)

 

(286)

தான்யா னானீ யொருமை பன்மைதாம்
யாம்நா மெலாமெலீர் நீயிர்நீர் நீவிர்.

     எ - ன், மேற்சொன்ன, ‘எல்லாந் தாந்தான்’ என்பனவற்றிற்கும்
தன்மைமுன்னிலைப் பெயர்கட்கும் பால்வகுத்தல் நுதலிற்று.

     (இ - ள்.) தான் யான் நான் நீயென்பன ஒருமைப்பாலாவனவாம்; ஒழிந்தன
பன்மைப்பாலாவனவாம் எ - று.

     வ - று. 1தான்வந்தான், யான்வந்தேன், நான்வந்தேன், நீவந்தாய் எ - ம்,
தாம்வந்தார், ‘யாம்வந்தேம், நாம்வந்தேம், யாமெல்லாம் வந்தேம், எல்லீரும் வந்தீர்,
நீயிர்வந்தீர், நீர்வந்தீர், நீவிர்வந்தீர்எ - ம் வரும்.

     (பி - ம்.) 1 யாம்வந்தோம், நாம்வந்தோம், யாமெல்லாம் வந்தோம்

(30)

 

(287)

ஒருவ னொருத்திப் பெயர்மே லெண்ணில.

     எ - ன், இவ்விருபெயர்கட்கும் ஆவதோர்விதியுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) இவ்விருபெயரும் இவ்வியம்பிய வாய்பாட்டால்நிற்றலன்றி இருவன்
மூவன் இருத்தி முத்தியென்பன 1முதலாக மேல்வரும் எண்களைக் கொள்ளா எ - று.

     (பி - ம்.) 1 முதலானஎண்களை

(31)

 

(288)

ஒருவ ரென்ப துயரிரு பாற்றாய்ப்
பன்மை வினைகொளும் பாங்கிற் றென்ப.

     எ - ன், இருபாற் பொதுச்சொன்முடிபுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) ஒருவரென்னும்பெயர், உயர்திணையாண்பால் பெண்பா லிரண்டிற்கும்
பொதுவாய் ஒருபொருளைத் தருமெனினும் பன்மை வினை கொண்டு முடியும்
பகுதித்தென்று சொல்லுவர் புலவர் எ - று.

     வ - று. பார்ப்பாரொருவர்வந்தார், பார்ப்பனியாரொருவர் வந்தார் எனவரும்.

(32)

 

(289)

பொருண்முத லாறோ டளவைசொற் 1றானி
கருவி காரியங் கருத்த னாதியுள்
ஒன்றன் பெயரா னதற்கியை பிறிதைத்
தொன்முறை யுரைப்பன வாகு பெயரே.