| 142 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | விளக்கு, நெஞ்சு, நிருதியென்பன, சுடரினையும் உணர்வினையும் தெய்வத்தினையுமுணர்த்தின் இயற்பெயராம்; விளக்குமுரிந்தது, நெஞ்சுநொந்தது, நிருதிமேலெழுந்ததென அவற்றிற்கிடமான பிழம்பினையும் உறுப்பினையும் திசையினையுமுணர்த்தின் ஆகுபெயராம்.
9அம்பு, வேல், பஞ்சு என்பன 10கருவிகளையுணர்த்தின், இயற்பெயராம்; இஃதோரம்பு, இஃதோர்வேல், இவ்வாடைபஞ்சு என அவற்றின் காரியமாகிய வடுக்களையும் ஆடையினையுமுணர்த்தின் ஆகுபெயராம்.
சோறு, அவல், கடகம், துலாமென்பன அக்காரியங்களையுணர்த்தின், இயற்பெயராம். இக்காணம் சோறு, “இந்நெல் அவல், இப்பொன் கடகம், இம்மரம் துலாமென அவற்றிற்குக்காரணமாகிய காணம் நெல் பொன் மரங்களையுணர்த்தின், ஆகுபெயராம்.
கோலிகன், சாலிகன், பட்டணவன், சேணிகனென்பன அச்சாதிகளையுணர்த்தின், இயற்பெயராம்; இவ்வாடை கோலிகன், இவ்வாடை சாலிகன், இவ்வாடை பட்டணவன், இவ்வாடை சேணிகனென அவ்வவரான் ஆக்கப்பட்ட ஆடைகளையுணர்த்தின், ஆகுபெயராம். பிறவுமன்ன.
பொற்றாலியென்பது ஆகுபெயரென்பாருமுளர். அது, தொகைமொழியாய்ப் புறத்துப்பொருள்தருதலின், ஆகுபெயராகாது; அன்மொழித்தொகையாமென்க.
(பி - ம்.) 1றானம் 2 பண்பேதொழிலே 3 தானமே4 தொன்றனை வரலாற்றோடு 5 ஆக்கமாகும்பெயர் ஆகுபெயராயிற்று. 6 கிளவி 7 நெருநலிருங்கழி நீலமுஞ்சூடாள், செறுவட்டம் 8 படுவிப்பசொல் 9யாழ்குழலென்பன அக்கருவியையுணர்த்தின் இயற்பெயராம்; யாழ்கேட்டன குழல்கேட்டன என்று அவற்றானாய ஓசையையுணர்த்தின் ஆகுபெயராம்; நெல்லாதல் காணமாதல்பெற்றான் சோறுபெற்றேனெனக் காரணப்பெயர் காரியத்தின் மேல் ஆகுபெயராய்வந்தன 10காரணங்களையுணர்த்தின் 11இந்நெல்லு அவல் | (33) | | | (290) | ஏற்கு மெவ்வகைப் பெயர்க்குமீ றாய்ப்பொருள் வேற்றுமை செய்வன வெட்டே வேற்றுமை. | எ - ன், மேல் வேற்றுமைசார்தற்கிடனுமாய் வினைப்பெயரல்லாதன காலந்1தோன்றாதனவுமாய் வருதல் பெயர்க்கிலக்கணமென்று தன்பகுதி யெல்லாமுணர்த்தி, ஈண்டு அவ்வேற்றுமையுணர்த்துவா னெடுத்துக்கொண்டார், அவற்றுள், இச்சூத்திரம் வேற்றுமைகளினியல்பும் அவற்றின்பகுதியுமுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) தம்மை ஏற்பனவான ஒருமொழிப்பெயர், தொடர்மொழிப் பெயர், பொதுமொழிப்பெயர், உயர்திணைப்பெயர், அஃறிணைப்பெயர், ஆண்பாற்பெயர், பெண்பாற்பெயர், 2பலர்பாற்பெயர், ஒன்றன்பாற்பெயர், பலவின்பாற்பெயர், தன்மைப்பெயர், முன்னிலைப் பெயர், படர்க்கைப் பெயர், பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், பண்புப் பெயர், தொழிற்பெயர், எண்ணுப்பெயர், நிறைப்பெயர், அளவுப்பெயர், | |
|
|