1. - பெயரியல்

143

   
ஆகுபெயர், சுட்டுப்பெயர், வினாப்பெயரென்னும் எல்லாப்பெயர்களுக்கும் ஈற்றிலேநின்று
பொருள்களை வேற்றுமை செய்வனவான வேற்றுமைகள் எட்டாம் எ - று.

     வேற்றுமை செய்தலான் வேற்றுமை; வேற்றுமைசெய்வன யாவை அவை
வேற்றுமையெனவுமாம். ‘எட்டே’ என்புழி ஏகாரம் தேற்றேகாரம்; 2விளியைப்
பெயரதுவிகாரமென்று அப்பெயருளடக்கி ஏழென்பாருமுளர்; அது
பெயரின்விகாரமேயாயினும் படர்க்கையை முன்னிலையாக வேறுபடுத்தலுடைமையின்,
எட்டென்பார் மதங்கோடற்குவந்ததென்க; “ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை,
வேறென விளம்பான் பெயரது விகாரமென், றோதிய புலவனு முளனொரு வகையா,
னிந்திர னெட்டாம் வேற்றுமை யென்றனன்” என்றார், அகத்தியனாரென்க.

     வேற்றுமைசெய்தலாவது: முதலாவது சாத்தனென அப்பெயர்தான்
தன்பொருண்மையிற்றிரிபின்றி ஏனையவற்றின் வேறுபடுத்தது. இரண்டாவது
சாத்தனையென அப்பெயர்ப் பொருண்மையைக் காரியமாக்கிற்று. மூன்றாவது
சாத்தனாலென அப்பெயர்ப்பொருண்மையைக் கருத்தாவாக்கிற்று. நான்காவது
சாத்தற்கென ஏற்றுக்கொள்வ4தாக்கிற்று. ஐந்தாவது சாத்தனினென நீக்குவ5தாக்கிற்று.
ஆறாவது சாத்தனதெனக் கிழமைத்6தாக்கிற்று. ஏழாவது சாத்தன் கண்ணென
இட7மாக்கிற்று. எட்டாவது சாத்தாவென முன்னிலை8யாக்கிற்று. இவ்வகையவாதல் தத்தம்
இலக்கணச்சூத்தி ரங்களுட் காண்க.

     ‘ஏற்குமெவ்வகைப்பெயர்க்குமீறாய்’ எனவே, ஏனைவினைச் சொற்களும்
பெயர்ப்படா இடையுரிச்சொற்களும் வேற்றுமையேலாவென்பது
தானேபோதருமெனக்கொள்க.

     (பி - ம்.) 1 தோன்றாவுமாய் 2 பல்லோர்பெயர் ஒன்றன்பெயர் பலவின் பெயர்3
விளிபெயர்களது விகாரமென்றடக்கி 4 - 8 ஆயிற்று.

(34)

 

(291)

பெயரே ஐஆல் குஇன் அதுகண்
விளியென் றாகு மவற்றின் பெயர்முறை.

     எ - ன், மேல், “எட்டே” என்றவேற்றுமைகளின் பெயரும் முறையும்
உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) மேல், பெயர்கள் வேற்றுமையேற்குமென்றதற்கு ஈண்டு ஓதிய பெயரே
பெயர்; இம்முறையே முறை எ - று.

     ஏகாரம் அசைநிலை.

(35)

 

(292)

ஆற னுருபு மேற்குமவ் வுருபே.

     எ - ன், எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று.

     (இ - ள்.) மேல், பெயர்கள் வேற்றுமையை ஏற்குமென்றார்; அவையேயன்றி
ஆறனுருபும் 1அவ்வுருபுகளையேற்கும் எ - று.

     அஃதேல், பெயரோடு இதற்கு வேற்றுமை யாதோவெனின், உருபேற் புழியும் தன்
இருகிழமைப்பொருளினும் திரியாதுநிற்றலென்க.