144

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     2உம்மை எண்ணும்மை.

     வ - று. சாத்தனது, சாத்தனதை, சாத்தனதால், சாத்தனதற்கு, சாத்தனதனின்,
சாத்தனதனது, சாத்தனதன்கணெனவரும்.

     விளியேலாதெனினும் உருபேற்றலிற் குறைபட்டதாகாது; சில உறுப்பிற்
குறைபட்டாரும் மக்களெனப்படுவர், அதுபோலவென்பது.

     பெயர்வேற்றுமையும் ஏனையுருபுகளையும் ஏற்குமால், அஃது ஒழித்த
தென்னையோ வெனின், பெயர் எழுவாயுருபாவது தன்பயனிலை தோன்ற
நின்றகாலையன்றே; ஆண்டுப் பிறவுருபுகளையேலாது; ஏற்பின் தன் பொருண்மையும்,
ஏற்கும் உருபின்பொருண்மையும் ஒருங்குடைத்தாதல் வேண்டும்; அதனாற்
பயனிலைகொள்ளாது நின்ற பெயரே உருபுகளை ஏற்குமெனக்கொள்க.

     (பி - ம்.) 1உருபுகளேற்கும் 2உம் எண்ணும்மை

(36)

 

(293)

நீயிர் நீவிர்நா னெழுவா யலபெறா.

     எ - ன், மேல் “ஏற்கு மெவ்வகைப் பெயர்க்குமீறாய்” என்றார்; எனவே
ஏலாப்பெயருமுளவென்பதுமாயிற்று; அவை இவையென்பது உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) இம் 1மூன்றுபெயரும் எழுவாயுருபினையொழிய ஏனையுருபுகளையேலா
எ - று.

     (பி - ம்.) 1மூவகைப்பெயரும்

(37)

 

(294)

அவற்றுள்,
எழுவா யுருபு திரிபில் பெயரே
வினைபெயர் வினாக்கொள லதன்பய னிலையே.

     எ - ன், நிறுத்தமுறையானே பெயர்வேற்றுமையது இலக்கண முணர்த்துதல்
நுதலிற்று.

     (இ - ள்.) மேற்சொன்ன எட்டனுள்ளும் முதல்வேற்றுமைக்கு உருபாவது திரிபு
யாதுமின்றிநிற்கும் பெயர்தானேயாம்; வினையையும் பெயரையும் வினாவையுங்கோடல்
அதற்குப் பொருணிலையாம் எ - று.

     வினைபெயரென்று பொதுப்பட வைத்தமையான், வினைமுற்றுக் குறிப்புமுற்றுப்
பெயரெச்ச வினையெச்சங்களினும் 1இருதிணையைம்பால் மூவிடத்துப்பெயர்களினும்
இவற்றின் பொதுப்பெயர்களினும் ஏற்பனவெல்லாம் கொள்க.

     ஏகாரஓகாரங்கள் இடைச்சொல்லாய் இவற்றுளடங்காமையின் வினாவென
வேறெடுத்தோதினாரென்க. மேலே உருபுசொல்லி ஈண்டுஞ் சொல்லுதல்
கூறியதுகூறலென்னும் குற்றமாம்பிறவெனின், ஆண்டுப் பெயரும் முறையும் சொன்னார்;
ஈண்டு வேற்றுமைக்குவரும் இலக்கண மெல்லாம் சொன்னாராதலின் ஆகாதென்க.
இக்கடா விடை மேல்வருவனவற்றிற்கும் ஒக்கும்.