வ - று. அவன்வந்தான், அவள்வந்தாள், அவர்வந்தார், அதுவந்தது, அவைவந்தன எ - ம், யான்வந்தேன், யாம்வந்தேம் எ -ம், நீவந்தாய், நீவிர் வந்தீர் எ- ம், தான்வந்தான், தான்வந்தாள், தான்வந்தது, தாம்வந்தார், தாம்வந்தன, எல்லாம்வந்தார், எல்லாம்வந்தன, எல்லாம்வந்தேம், எல்லாம் வந்தீர் எ - ம், அவன்வாழ்க, 2யான்வாழிய, நீவாழியர் எ - ம் வினைமுற்று வந்தன. 3அவன்வேலினன், அவன்அகத்தான், அவன்ஆதிரையான், அவன் 4தாடியான், அவன்கரியான், அவன்செலவினன், அவனுண்டு, அவனில்லை, அவர்வேறு, அதுகரிது, அவையுளவென வினைக்குறிப்புமுற்று வந்தன. அவன்செய்த, 5அவள்செய்கின்ற, அவர்செய்யும், அதுசெய்த, அவை செய்யுமெனப் பெயரெச்சமேற்றன. அவன்செய்து, அவள்செய்பு, அவர்செய்யா, அதுசெய்யூ, அவைசெய்தெனவெனஇவை வினையெச்சங் கொண்டன.
அவன்அந்தணன், அவள்பேதை, 6அவர்சான்றோர், அவன்யான், அவன் நீ, அவன்யாவன், இவன், எவன், இவள் எவள், அவள்நீ, உவர் தந்தையார், அது பெடை, இது சேவல், உவை ஊர்கள் எ - ம், யான் அரசன், யாம் விறலியர், யான் நீ, யாம்நீங்கள், யாம்7மந்திரிகள் எ - ம், நீ புலவன், 8நீயிர் அவையீர், நீகிள்ளை, நீயிர் தாயர் எ - ம், சாத்தன் அவன், எல்லாம் மாந்தர், எல்லாம் மான்கள் எ - ம் பெயர்களேற்றன.
அவன்யாவன், 9இவள்யாவள்; அவனே, இவளே, உவரே, அதுவோ, அவையோ எ - ம், யான்யாவன், யான்யாவள்; யாமே, யாமோ எ - ம், 10நீயிரெவரீர்; நீரே, நீரோ எ - ம், சாத்தனே, மக்களோ எ - ம் வினா ஏற்றன.
11 ஆயன் சாத்தனென்றற்றொடக்கத்தன பண்பொட்டுப் பெயராய் இம்மூன்றனுள் ஒன்றுகொள்ளுமென்க.
“பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல், வினைநிலையுரைத்தல், வினாவிற் கேற்றல், பண்புகொள வருதல் பெயர்கொள வருத12லென், றன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே” (தொல். வேற்றுமையியல், 5) என்னுமிவ்வாறும் இம்மூன்றனுளடங்குமெனக்கொள்க.
“வினைநிலை யுரைத்தலும் வினாவிற் கேற்றலும், பெயர்கொள வருதலும் பெயர்ப்பய னிலையே” என்றார், அகத்தியனாருமென்க.
(பி - ம்.) 1இருதிணை மூவிடத்தைம்பாற்பெயர்களினும் 2யான் வாழ்க 3 அவன்வேலன் 4 முடியான் 5 அவன்செய்கின்ற, அவன் செய்யும் 6 அவர்சான்றார்7 வந்திகள் 8 நீயிர் அரிவையீர் 9 (1) இவளெவள், உவரோ, அதுவோ; (2) யானோ, யாமோ எ - ம் 10நீயிர்யாவர் 11ஆதன்சாத்தன் 12 (1) லென்றிவ்வனைத்தும், (2) லென்றிவையனைத்தும் | (38) | | | (295) | இரண்டா வதனுரு பையே யதன்பொருள் ஆக்க லழித்த லடைத னீத்தல் ஒத்த லுடைமை யாதி யாகும். | |
|
|