| 146 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | எ - ன், நிறுத்த முறையானே இரண்டாம் வேற்றுமையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) இரண்டாம் எண்ணுமுறைமைக்கணின்ற வேற்றுமைக்கு ஐயென்பது உருபாம்; அதனது பொருள் ஒன்றை ஆக்கலும் அழித்தலும் அடைதலும் நீத்தலும் ஒத்தலும் உடைமையுமுதலானவையாம் எ - று.
‘ஆதி’ என்றதனால், ஒவ்வாமைமுதலானவும் இவற்றின்பரியாயமொழிகளும் கொள்க.
வ - று. அறத்தை ஆக்கினான், நூலைக்கற்றான், தேரைஊர்ந்தான், அணியை அணிந்தான், பொன்னை நிறுத்தான், நெல்லைஅளந்தான், 1நீரைக் கட்டினானென்றற்றொடக்கத்தன ஆக்கல். அறத்தை அழித்தான், மரத்தை அறுத்தான், காமனைவென்றான், பகையைக் கொன்றான், ஊரை எரித்தான், மரத்தைக் குறைத்தா னென்றற்றொடக்கத்தன அழித்தல். அறத்தை அடைந்தான், வீட்டை மேவினான், ஊரை ஒன்றினான், நாட்டை நண்ணினான், குன்றைக் குறுகினானென்றற்றொடக்கத்தன அடைதல். அறத்தைத் துறந்தான், மறத்தை நீத்தான், வீட்டைவிட்டான், பாட்டை 2ஒழிந்தானென்றற்றொடக்கத்தன நீத்தல். மண்ணை ஒத்தான், பொன்னை ஒத்தான், புலியை ஒத்தான், சிங்கத்தைப்போன்றானென்றற்றொடக்கத்தன ஒத்தல். அருளையுடையான், 3கொடையையுடையான், முடியையுடையானென்றற் றொடக்கத்தன உடைமை; வினைக்குறிப்பு.
அவனை ஒவ்வான், இவனைப்போலானென்றற்றொடக்கத்தன ஒவ்வாமை. அறத்தைக்காத்தான்; வளர்த்தான், பெருக்கினான், படைத்தானென்றற்றொடக்கத்தன ஆக்கல் மொழிப்பரியாயம். பிறவற்றிற்கும் இவ்வாறே வருவன கண்டுகொள்க.
(பி - ம்.) 1நிரையைக்கட்டினான் 2ஒழித்தான் 3கொட்டையை | (36) | | | (296) | மூன்றா வதனுரு பாலா னோடொடு கருவி கருத்தா வுடனிகழ் வதன்பொருள். | எ - ன், நிறுத்தமுறையானே மூன்றாம்வேற்றுமையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) மூன்றாம் வேற்றுமைக்கு உருபு ஆலும் ஆனும் ஓடும் ஒடுவுமாம்; அதற்குப் பொருள் கருவியாதலும் கருத்தாவாதலும் உடனிகழ்ச்சியுமாம் எ - று.
மேல், ஆலொன்றையும் இதற்கு உருபாகச்சொல்லி, ஈண்டு 1நாலுருபு சொல்லுதல் மலைவாம் பிறவெனின், ஆண்டுப் பெயரும் முறையும் காட்டுதன் மாத்திரைக்கு வழக்கிடத்தும் செய்யுளிடத்தும் பயின்றுவருவதனைச்சொன்னார்; 2ஈண்டு இவ்வேற்றுமைக்குவரும் உருபெல்லாம் எடுத்தோதினாராகலான், மலைவாகாதென்க. 3இக்கடாவிடை மேல்வருவனவற்றிற்கும் ஒக்கும்.
“ஆலு மானு மோடு மொடுவும், சாலு மூன்றாம் வேற்றுமைத் தனுவே, செய்வோன் காரணஞ் செயத்தகு கருவி, யெய்திய தொழின்முத லியைபுடைத் ததன்பொருள்” என்றார் அகத்தியனாருமென்க. அஃதேல், அவர் ஐந்துபொருளாகச் | |
|
|