சொன்னாராலோவெனின், இவர், இவ்வாறு அறிதற்குக் கருவியான ஞாபகக்கருவியையும் இயற்றுதற்குக் கருவியான காரகக்கருவியையும் பொதுவே கருவியெனவும், ஏவுதற்கருத்தாவையும் இயற்றுதற் கருத்தாவையும் பொதுவே கருத்தாவெனவும் அடக்கி மூன்றாகவோதினாரென்க. கருவியெனினுங் காரணமெனினும்ஏதுவெனினும் நிமித்தமெனினு மொக்கும். அவ்விருவகைக்கருவியும் முதற்காரணமும் துணைக்காரணமுமென இரண்டாம். அவற்றுள் முதற்காரணமாவது அவ்விருவழியுள்ளும் தன்னை இன்றியமையாச் சிறப்புடையது. துணைக்காரணமாவது அவ்விரு வழியுள்ளும் முதற்காரணத்துக்குத் துணையாகவருவது.
வ - று. கடல்கண்டானென்றால், அக்காட்சிக்கு உணர்வு முதற்காரணம்; கண்ணும் ஒளியுமுதலானவை துணைக்காரணம்; இவை ஞாபகக் கருவி. குழைசெய்தானென்றால், அதற்குப் பொன் முதற்காரணம், 4கம்மக் கருவியும் தீயுமுதலானவை துணைக்காரணம். இவை காரகக் கருவி; பிறவுமன்ன. கருவியைப் பொருண்மைப்பன்மையான் முற்கூறினாரென்க. உணர்வினால் உணர்ந்தான், சுடரினாற்கண்டான், புகையுண்மையால் எரியுள்ளது, அலகினால் எண்ணினான், நாழியால் அளந்தான்; இவை ஞாபகக் கருவி. பொன்னாலாயமணி, மண்ணாலாயகுடம், வாளாலெறிந்தான், கையால் வாங்கினான், தவத்தால் வீடெய்தினான், முயற்சியாலாயினான், காலாலேகினான், பொன்னாலணிந்தான்: இவை காரகக்கருவி; “முதல்வனும் பொருளுங் கருமமுங் கருவியும், ஏற்பது நீக்கமு மெனவிவை காரகம்.”
*தச்சனாலியற்றப்பட்ட வையம், கடவுளாலாக்கப்பட்ட விமானம், புலியால் 5விழுங்கப்பட்டான், சுறவால் ஏறுண்டான்; இவை செய்யும்வினை முதல். அரசனாலியற்றப்பட்ட தேவகுலம், தேவராலாய திரு; இவை ஏவல் வினை முதல்.
“தூங்குகையா லோங்குநடைய, உறழ்மணியாலுயர்மருப்பின” (புறநா. 22), “பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன், பெண் டகையாற் பேரமர்க் கட்டு” (குறள். 1083) : இவை உடனிகழ்ச்சி. ஆனுருபோடும் இவ்வாறே ஒட்டிக்கொள்க.
“உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும், கல்லா ரறிவிலா தார்” (குறள். 140), “நாவீற் றிருந்த கலைமாமக ளோடு நன்பொற், பூவீற்றிருந்த திருமாமகள் புல்ல நாளும்” (சீவக. 30), “சுழியோ டெறிபுனற் பொன்னி நன்னாடன் சுரகுருவின் (சோழனின்) வழியோ னமலன் மயிலையன் னீர்மணி வாயினின்று, மொழியோ தெரிந்தில கொங்கையுஞ் செய்ய முகத்தினின்ற, விழியோ படுகொலை யோவிலங் கோவந்து மீண்டனவே”, “மனத்தொடு வாய்மை மொழியிற் றவத்தொடு தானஞ்செய் வாரிற் றலை” (குறள். 395) என ஓடு ஒடுவந்தவாறு.
அரசனால் இயற்றப்பட்ட தேவகுலமென்றற்றொடக்கத்தனவற்றுள் உருபல்லாத பிறமொழிகள் 6வருமாறென்னையெனின், அவை கனலொடு * குறுந். 61. | |
|
|