148

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
புகையும் குடையொடு நிழலும்போல உருபுவரவந்து நீங்கநீங்கும், பொருளை விளக்க
வேண்டுழியெனக்கொள்க.

     (பி - ம்.) 1 நாலுருபாகச் 2 ஈண்டை 3 இக்கடாவும்விடையும் 4 கருமக் கருவியும்
5 விழுங்கப்பட்டானென்றற்றொடக்கத்தன இவை 6 துறை நகைத்துறை 7
என்னைவருமாறெனின்

(40)

 

(297)

நான்கா வதற்குரு பாகுங் குவ்வே
கொடை பகை நேர்ச்சி தகவது வாதல்
பொருட்டுமுறை யாதியி னிதற்கிதெனல் பொருளே.

     எ - ன், நிறுத்த முறையானே நான்காம்வேற்றுமையாமாறு உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) நான்காம் வேற்றுமைக்குக் குவ்வென்பது உருபாம்; கொடையும் பகையும்
நேர்ச்சியும் தகவும் அதுவாதலும் பொருட்டும்முறையு முதலான பொருண்மைக்கண்
இதற்கிதுவென்பதுபட நிற்றல் அதற்குப் பொருளாம் எ - று.

     வ - று. தேவர்க்குப்பூசை, சாத்தற்குச்சோறு, “இரப்பார்க்கொன், றீவார்மே
னிற்கும் புகழ்” (குறள். 232), “இரந்தோர்க்குத் 1தேர்வீசும் வண்கை யவன்” என்பன
கொடை. மக்கட்குப்பகைவெகுளி, பாம்புக் குப்பகை கீரி, “அல்லவை செய்தார்க்
கறங்கூற்றம்” (நான்மணி. 84; மூதுரை, 27 ; சீலப். 20. இறுதி வெண்பா), “பிணிக்கு
மருந்து பிறமன் னணியிழை, தன்னோய்க்குத் தானே மருந்து.” (குறள். 1102) என்பன
பகை. 2கற்றோற்கு மகள்நேர்ந்தான், அறத்திற்குப் பொருணேர்ந்தான், இறைக்கதுநேரின்
3நினக்கிது நேருமென்பன நேர்ச்சி. அறத்திற்குத்தக்கது அருள், சாத்தற்குத்தக்காள்
கொற்றி, “செல்வர்க்கே செல்வந் தகைத்து” (குறள். 125), “அருங்கல முலகின் மிக்க
வரசர்க்கே யுரிய” (சூளா. கல்யாண. 189) என்பன ‘தகுதி; ஆடைக்குநூல்,
ஆழிக்குப்பொன் என்பன அதுவாதல் “5வரிசைக்குவருந்தும்” (புறநா. 47),
கூழுக்குக்குற்றேவல்செய்யு மென்பன பொருட்டு; சாத்தற்குமகன், கொற்றற்குமகள்
என்பன முறை.

     ‘ஆதி’ என்றதனால், கரும்பிற்குவேலி, மயிருக்கெண்ணெய்,
உயிருக்குண்டியென்னும் அதற்குவினையுடைமையும், சாத்தற்குப் பொருளென்னும்
படுபொருளும், கைக்குயாப்புடையது கடகமென்னும் யாப்புடைமையும், நாய்க்கு
நட்புடையனென்னும் நட்புடைமையும், தாய்க்குக் காதலென்னும் காதலும், 6வடுகரசர்க்குச்
சிறந்தோர் சோழியவரசரென்னும் சிறப்புடைமையும் கொள்க.

     இன்னும் இஃது, ஏனைவேற்றுமைகள்போல அளவுபட்டபொருண் மைத்தன்றிவரும்;
அவையும் இதற்கிஃதென்பதேபட உரைத்துக்கொள்க. அவை அரசர்க்கு அமைச்சன்,
அவர்க்குத்தமர், 7நமக்கு நல்லன், “நிலத்துக் கணியென்ப நெல்லுங் கரும்பும்”
(நான்மணி. 9), “மனைக்குப்பாழ் வாணுதலின்மை”