1. - பெயரியல்

149

   
(நான்மணி. 20), “போர்க்குப்புணைமன்” (பு. வெ. 4 : 20), “கள்வார்க்குத்
தள்ளு முயிர்நிலை” (குறள். 290), “அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்” (குறள்.
543), “உண்டி வெய்யோர்க் குறுபிணி யெளிது” (முதுமொழி. 77), “பல்லுக்குத் தோற்ற
பனிமுல்லை” 1 யா.வி. 4. மேற்.), “ஊர்க்கு மணித்தே பொய்கை பொய்கைக்குச்,
சேய்த்து மன்றே சிறுகான்யாறே” (குறுந். 113), “8தனக்குச்சரியென்ப நல்லாடானவற்கீன்ற
மைந்தன்”, “மைந்தற்கு மடவாட்கு நிகழ்ந்தகேட் டஞ்சுமின் கொலை9யஞ்சு மின்றீயன”
என்பன முதலாயினவெனக்கொள்க.

      “சிறப்புடைப் பொருளைத் தானெடுத்து மொழிதல்” என்பதனால், இதற்குச்சிறந்தன
எடுத்தோதி, இவை ‘ஆதி’ என்பதனால் தழுவவைத்தாரென்க.

     (பி - ம்.) 1தேரீயும் 2சான்றோற்கு 3எனக்கிது 4தகவாம் 5வரிசைக்குழும்
6வடுகரரசர்க்கு 7(1) நமர்க்கு; (2) நமனுக்கு 8(1) தனக்குச் சரியென்ப நல்லமானவர்க்கீன்ற
(2) தனகிரியென்ப 9 அஞ்சன் மினன்றியென

(41)

 

(298)

ஐந்தா வதனுரு 1பின்னு மில்லும்
நீங்கலொப் பெல்லை யேதுப் பொருளே.

     எ - ன், நிறுத்தமுறையானே ஐந்தாம் வேற்றுமையாமாறு 2உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) ஐந்தாம்வேற்றுமைக்கு இன்னென்பதூஉம் இல்லென்பதூஉம் உருபாம்;
நீங்கிநிற்றலும், உவமையும், எல்லையும், கருவியும் பொருளாம் எ - று.

     வ - று. ஊரினீங்கினான், தமரிற்றீர்ந்தான், வரையின் வீழருவி, “தலையி னிழிந்த
மயிரனையர் மாந்தர், நிலையி னிழிந்தக் கடை” (குறள். 964) எனவருமிவை நீக்கம்.
“திறல்வே னுதியிற் பூத்த கேணி” (சிறுபாண். 172), “நெய்த்தோர் மீமிசை நிணத்திற்
பரக்கும்” (அகநா. 9), “பொன்னிற் பிதிர்ந்த பொறிச் சுணங் கிளமுலை.” இவை ஒப்பு;
இதனினெடிது, இதனினினிது, இதனினன்று, இதனிற்றண்ணிது, இதனின்மெல்லிது என்பன
நீக்கந் தழுவிநிற்கும் போலி; கருவூரின் கிழக்கு, மருவூரின் மேற்கு, வையையாற்றின்
வடக்கு, 4மருதயாற்றின் தெற்கு எனவருமிவை எல்லை, முயற்சியிற் பிறத்தலான் ஒலி
நிலையாது, புகையுண்மையின் எரியுள்ளது, பொன்னினாயகுடம், “கோட்டிற் செய்த
கொடுஞ்சி நெடுந்தேர்” (பொருந. 163), ‘அறி விற்பெரியன்’ எனவருமிவை 5கருவி;
இல்லொடும் ஒட்டுக.

     (பி - ம்.) 1 இல்லுமின்னும் 2 தொகுத்துணர்த்துதல் 3 அதற்குப் பொருளாம் 4
மருதையாற்றின் 5 ஏது

(42)