1 பலவெழுத்தினானாகிய நூல் யாங்ஙனம் அறிதியோ? பேதாய்’ என்று இகழப்படுதலானும் இவ்விருவகைப்பாயிரமும் வேண்டும் என்க. இப்பாயிரச்சூத்திரங்களை விரித்தெழுதிற் பரக்குமென்பதனானும் பெரும்பாலும் தாமே பொருள்விளங்கிக்கிடத்தலானும் உரை விரித்தெழுதிற்றிலம்; இவற்றை விளங்க விரித்துரைத்துக்கொள்க. (பி - ம்.) 1 மாணகர்க்கு 2 வணிந்துரையே 3 சில்லெழுத்தினான் | (54) | இனித் 1 தமிழினதுதன்மையும் இந்நூற்குச் சிறப்புப்பாயிரமும் சொல்லுதும். * மலர்தலை யுலகின் * * * இருந்தவத் தோனே. (பி - ம்.) 2 தமிழது என்பது,தமிழினது தன்மையும் இந்நூற்குச் சிறப்புப்பாயிரமும் உணர்த்துதனுதலிற்று. (இ - ள்.) மலர் தலை உலகின் - பரந்த இடத்தையுடைய பூமியின்கண், மல்கு இருள் அகல - செறிந்த இருள்நீங்க, இலகு ஒளி பரப்பி - விளங்கா நின்றகதிரைவிரித்து, யாவையும் விளக்கும் - நிலம் நீர் 1 முதலாகிய எல்லாப் பொருள்களையும் விளங்கக்காட்டும், - பருதியின் - ஆதித்தனைப்போல, ஒரு தானாகி - 2 உலகிற்கெல்லாம் தான் ஒருவனேயாகி, முதல் ஈறு ஒப்பு அளவு ஆசை முனிவு இகந்து உயர்ந்த - பிறப்பும் இறப்பும் உவமையும் அளவும் 3 ஆர்வமும் செற்றமுமின்றி ஞானகுணங்களான் மிக்க, அற்புதமூர்த்தி - ஆச்சரியத்தையுடைய இறைவனானவன், தன் அலர்தரு தன்மையின் - தன்னுடைய பரவாநின்ற ஆற்றலானே (தன்னுடைய விரிந்த தன்மையாகிய கருணையெனினுமமையும்), மன இருள் இரிய - உலகத்துள்ள உயிர்களினுடைய மனங்களிலுண்டான அறியாமையாகிய இருள் நீங்க, மாண் பொருள் முழுவதும் - மாட்சிமைப்பட்ட ‘அற முதற்பொருள் அனைத்தினையும், முனிவு அற அருளிய - (5பதினெண்ணிலத்திலுள்ளார் எல்லாரும்) விரும்ப அருளிச்செய்த, மூவறு மொழியுளும் - பதினெட்டு மொழிகளுள்ளும், குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனும் நான்கு எல்லையின் இரு தமிழ் கடலுள் - இச் சொன்ன நான்கு 6 கரைக்கும் உட்பட்டு வழங்காநின்ற பெரிய 7தமிழாகிய கடலிலுள்ள, அரு பொருள் ஐந்தையும் - எழுத்துச் சொற்பொருள் யாப்பு அணியென்னும் 8அரிய பொருளைந்தையும், யாவரும் உணர - எல்லாரும் உணரும்படி, தொகை வகை விரியின் தருக என - இம்மும்மையானும் விளங்கச்சொல்லுக என, துன்னார் இகல் அற நூறி - பொருந்தாதாருடைய மாறுபாடெல்லாம் மாயும்படி கெடுத்து, இரு நிலம் முழுவதும் - பெரிதாகிய பூமிஅனைத்தினையும், தனதென கோலி - தன தென்றே பற்றிக்கொண்டு, | | * இதன் முழுப்பாகத்தை இந்நூலின் முதற்பக்கத்திற் காண்க. | |
|
|