| 150 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | | | (299) | ஆற னொருமைக் கதுவு மாதுவும் பன்மைக் கவ்வு முருபாம் பண்புறுப் பொன்றன் கூட்டம் பலவி னீட்டம் திரிபி னாக்க மாந்தற் கிழமையும் பிறிதின் கிழமையும் பேணுதல் பொருளே. | எ - ன், நிறுத்தமுறையானே ஆறாம்வேற்றுமையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) ஆறாம்வேற்றுமையின் 1ஒருமைப்பொருண்மைக்கு2 அதுவும் ஆதுவும், பன்மைப்பொருண்மைக்கு அவ்வும் உருபாம். பண்பும் உறுப்பும் ஒருபொருட்டிரட்சியும் பலபொருட்டிரட்சியும் ஒன்று திரிந்து ஒன்றாதலுமாகும் 3ஐந்துதற்கிழமையும் பிறிதின்கிழமையும் போற்றுதல் அதற்குப்பொருளாம் எ - று.
“ஆற னுருபே 4யதுவா தவ்வும், வேறொன் றுரியதைத் தனக்குரி யதையென, விருபாற் கிழமையின் 5மருவுற வருமே, ஐம்பாலுரிமையு மதன்றற் கிழமை” என்றார், அகத்தியனார்.
வ - று. சாத்தனது இயல்பு; இளமை, வன்மை, குறுமை, உண்மை, நன்மை, நிறம், உணர்வு, கல்வி, கேள்வி என்பவை பண்புத்தற்கிழமை; சாத்தனதுசெலவு, நிலை, இருக்கை, உணவு, செய்கை 6என்றற்றொடக்கத்து வினைகளும் ஈண்டுத் தொழிற்பண்பாயடங்குமெனக்கொள்க. சாத்தனதுகை, யானையதுகோடு, வாழையதுபழம், 7தேரதுதட்டு, செய்யுளதடி என்பன உறுப்புத்தற்கிழமை; நெல்லது குப்பை, எள்ளது ஈட்டம், கொள்ளதுகுழாம், ஆனையதுதொகை, மாந்தரதுதொகுதியென்பன ஒன்றன் கூட்டத்தற்கிழமை; படையது தொகை, விலங்கினது ஈட்டம், மரத்ததுகுழாமென்பவை 8பலவினீட்டத்தற்கிழமை; கொள்ளதுநூறு, எள்ளது சாந்து, நெல்லதுசோறு, பயற்றதுகும்மாயமென்பவை திரிபுத்தற்கிழமை; சாத்தனதுஆடை, அரசனதுஆழி, ஆவினதுகன்று, கபிலரதுபாட்டு என்பவை பிறிதின்கிழமை. 9எனாதுகை, தனாதுதாள், நினாதுநிறம் எ - ம், எனாதெயில், நினாதுநிலம், தனாதுதரை எ - ம் இருகிழமைக்கண்ணும் அதுவும் ஆதுவும் வந்தவாறு. எனகைகள், நினதோள்கள், தனதாள்கள் எ - ம், எனயானைகள், நினநிரைகள், தனதானைகள், “உய்த்துச், சொரியினும் போகா தம” (குறள். 376)
எ - ம் இருகிழமைக்கண்ணும் அகரவுருபுவந்தவாறு.
(பி - ம்.) 1ஒருமைக்கு 2அதுவென்பதுவும் ஆதென்பதுவும் 3இந்த ஐந்து, 4அதுவும் ஆதுவும் வேறொன்றுடையதை 5பொருளுற்றுவருமே 6என்றற்றொடக்கத்தன 7தேரதுசெதிள், தட்டு, தடி 8 (1) பலகுழீஇய தற் கிழமை; (2) பலவியற்றற்கிழமை 9எனது, எனாது.......... | (43) | | | (300) | ஏழ னுருபு கண்ணாதி யாகும் பொருண்முத லாறு மோரிரு கிழமையின் இடனாய் நிற்ற லிதன்பொரு ளென்ப. | |
|
|