எ - ன், நிறுத்தமுறையானே ஏழாம்வேற்றுமையாமாறு உணர்த்து தல் நுதலிற்று.
(இ - ள்.) ஏழாம் வேற்றுமைக்கு உருபு கண்ணென்பதுமுதலானவையாம். பொருளாதியாறும் தற்கிழமையானும் பிறிதின்கிழமையானும் ஒன்றற்கிடனாய்நிற்றல் இதன்பொருளென்று சொல்லுவர் புலவர் எ - று.
வ - று. மணியின்கணொளி, மலையின்கண் ஓக்கம் எ - ம், பனையின் கண்அன்றில், தினையின்கட்கிள்ளை எ - ம் இருகிழமையானும் பொருள் 1இடனாயிற்று. ஊரின்கண்இல்லம், கடலின்கட்டிரை எ - ம், ஆகாயத்தின் கட்பறவை, குடக்கின்கட்குன்று எ - ம் இடம் இடனாயிற்று. யாண்டின் கண்இருது, நாளின்கணாழிகை எ - ம், வேனிற்கட்பாதிரி, காரின்கட் கொன்றை எ - ம் காலம் இடனாயிற்று. கையின்கண் விரல், மலரின்கணாற்றம் எ - ம், கையின்கட் கடகம், மலரின்கண் வண்டு எ - ம் சினை இடனாயிற்று. நிறத்தின்கணெழில், உணர்ச்சிக்கட்கூர்மை எ - ம், இளமைக்கட்செல்வம், வளமைக்கண்விருந்து எ - ம் பண்பு இடனாயிற்று. ஆடற்கணழகு, பாடற்கட்பணிவு எ - ம், ஆடற்கட்பாட்டு, பாடற்கண்யாழ் எ - ம் தொழிற்பெயர் இடனாயிற்று.
இதனுள், ‘பொருண்முதலாறும்’ என்றாராயினும் வினை வேற்றுமையேலாமையின், ஈண்டுத் தொழிற்பெயரேகொள்க.
(பி - ம்.) 1 இடமாயிற்று | (44) | | | (301) | கண்கால் 1கடையிடை தலைவாய் திசைவயின் முன்சார் வலமிட மேல்கீழ் புடைமுதல் பின்பா டளைதே முழைவழி யுழியுளி உள்ளகம் புறமில் லிடப்பொரு ளுருபே. | எ - ன், ஏழாம் வேற்றுமைக் கண்முதலானவை உருபென்றார், அவை இவையென்பதுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) கண்முதலாக எண்ணப்பட்ட இருபத்தெட்டும் இடப்பொருளைக்காட்டும் உருபுகளாம் எ - று.
வ - று. “நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே” (குறள். 408), “ஊர்க்கா னிவந்த 2பொதும்பருள்” (கலி. 56), “ஈத லியையாக்கடை” (குறள். 230), “நல்லாரிடைப்புக்கு” (நாலடி. 314), “நனந்தலை வந்த நல்லோர்”, “புன்னைநன்னீழற் புலவுத்திரைவாய்”, “தென்றிசை3யாஅய் குடியின் றாயின்” (புறநா. 132), “அவர் 4வயினிடைச் செல்வாய்”, “கற்றார்முற் றோன்றா கழிவிரக்கம்”, (நான்மணி. 8) “காட்டுச்சாரோடுங் குறுமுயால்”, “காழ்வரைநில்லாக் 5களிறவன் கைவலத்தியாழ்வரை நின்றது”, “இல்லிடப்பரத்தை”, “தன்மேற் கடுவரை நீரிற் கடுத்துவரக் கண்டும்” (பு. வெ. 1 : 11), “பேரிணர்க்கொத்தினொர் பிண்டிநிழற்கீழ்”, “கடைப்புடைக்கொள்ளிய நீர்”, “6சுரன் முதல்வந்த வுரன்மாய் மாலை” (நற். 3), “காதலிபின்சென்றதம்ம” (நாலடி. 395), “நம்பா டணையாத | |
|
|