| 152 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | நாள்”, “கல்லளைச்சுனைநீர் கையிலுண்டமையான்”, “தோழிக்குரியவை கோடாய் தேஎத்து’‘ (இறை. 14), “அவனுழையிருந்த தண்டமிழச்சாத் தன்” (சிலப். பதி. 10), “நின்றதோர் நறவேங்கை நிழல்வழி 7யசைந்தனளே”, “உறைப்புழி யோலை போல” (புறநா. 290), “குயில்சேர் குளிர்கா வுளிசேர் புறையும்”, “மூலையங் குவட்டுள் வாழுள்” (சீவக. 122), “பயன்சாராப் பண்பில்சொற் பல்லா ரகத்து” (குறள். 194), “செல்லுமென் னுயிர்ப்புறத் திறுத்தந்த மருண்மாலை” (கலி. 148), ‘ஊரிலிருந்தார், நீரில்விழுந்தார்’ எனவரும்.
(பி - ம்.) 1தலையிடைகடை 2உயர்நிலைமாடம் 3ஆயுயர்குடி 4வயின்கட் 5கடுங்களிறு கைவலத்து 6கான்முதல்வந்த 7அசைந்தனன் | (15) | | | (302) | எட்ட னுருபே யெய்துபெய ரீற்றின் றிரிபு குன்றன் மிகுத லியல்பயற் 1றிரிபு மாம்பொருள் படர்க்கை யோரைத் தன்முக மாகத் தானழைப் பதுவே. | எ - ன், எட்டாம் வேற்றுமையுருபும் பொருளுமுணர்த்துதல் நுத லிற்று.
(இ - ள்.) எட்டாமெண்ணுமுறைமைக்கணின்ற வேற்றுமைக்கு உருபாவது விளியேற்கும் பெயரின் ஈற்றது திரிபும் கேடும் மிகுதலும் இயல்பும் 2ஈற்றயலினின்றதன்திரிபுமாம். அதற்குப்பொருள், படர்க்கையிடத்தாரை ஒருவன் தனக்கு எதிர்முகமாக அழைக்கையாம் எ - று.
‘எய்துபெயர்’ எனவே, எய்தாதபெயரும் 3உளவென்பதாம்; அவை போக்கிச்சொல்லுதும். ‘படர்க்கையோரை’ எனவே முன்னிலையோரும் தன்மையோரும் ஈண்டே விலக்கப்பட்டாராவர். படர்க்கையோரையென்றாரேனும், “ஒருமொழி யொழிதன் னினங்கொளற்குரித்தே” என்பதனாற் படர்க்கையிடத்து ஐம்பாலுங் கொள்க.
பெயருருபிற்கும் இயல்பானவிளியுருபிற்கும் 4உருபான் வேற்றுமை யின்றேனும் பொருளான் உண்டெனக்கொள்க.
தானென்பது சந்தவின்பப் 5பொருட்டுவந்தது.
(பி - ம்.) 1 திரிவு 2 ஈற்றயலின்றிரிபுமாம் 3 உளவாம் 4 உருவான் 5 (1) பொருட்டாய்; (2) பொருள்தர | (48) | | | (303) | இஉ ஊவோ டையோ னளரல யவ்வீற் றுயர்திணை யோரவல் லிவற்றொடு ணஃகா னாவீ றாகும் பொதுப்பெயர் ஞநவொழி யனைத்தீற் றஃறிணை விளிப்பன. | எ - ன், மேல் விளியேற்கும்பெயரென்றார், அவை இவையெனத் தொகுத்துணர்த்துதல் நுதலிற்று. | |
|
|