1. - பெயரியல்

153

   
     (இ - ள்.) இ உ ஊ ஐ ஓ ன ள ர ல ய என்னும் பத்தீற்று உயர்
திணைப்பெயரும், இவற்றுள் ஓகாரமும் ரகாரமுமான இரண்டும் ஒழித்து நின்ற
இவற்றுடனே ணகாரஆகாரங்களை ஈறாகவுடைய 1பத்துப் பொதுப் பெயரும்,
ஞகாரநகாரங்களும் மேலையதிகாரத்துள் அளபின்கண் அல்லது ஈறாகாதென்று
விலக்கின எகாரமுமொழித்து ஒழிந்த இருபத்தோரீற்று அஃறிணைப்பெயரும்
விளியேற்பனவாம்எ - று.

     ஏனையீற்றுப்பெயர்கள் விளியேலாவென்றவாறு. இதனுட் பெயரென்பதனை
இருதிணையிடத்தும் வருவித்துக்கொள்க.

     (பி - ம்.) 1பத்தீற்றுப்பொதுப்பெயரும்

(47)

 

(304)

இம்முப் பெயர்க்க ணியல்பு மேயும்
இகர நீட்சியு முருபா மன்னே.

     எ - ன், மூவகைப்பெயர்க்கும் பொதுவான விளியுருபு தொகுத் துணர்த்துதல்
நுதலிற்று.

     (இ - ள்.) உயர்திணைப்பெயர் பொதுப்பெயர் அஃறிணைப்பெயரென்னும்
மூவகைப்பெயர்க்கண்ணும் எல்லாஈறும் இயல்பாதலும் அவற்றின்கண் ஏகாரமிகுதலும்
இகரவீறு ஈகாரவீறாய்த்திரிதலும் விளி 1வேற்றுமைக்கு உருபுகளாம் எ - று.

     வ - று. நம்பிகூறாய், 2மனைவிகூறாய், கண்கூறாய், தோழிகூறாய்,
தொழும்பிகூறாய், வேந்துகூறாய், பெண்டுகூறாய், பூண்டுகூறாய், ஆடூஉக் கூறாய்,
மகடூஉக்கூறாய், விடலைகூறாய், மங்கைகூறாய், கோக்கூறாய் எ - ம், நம்பியே, முனியே,
3கணியே, வேந்தே, பெண்டே, பூண்டே, ஆடூஉவே, மகடூஉவே, கோவே எ - ம், நம்பீ,
மனைவீ, தோழீ, தொழும்பீ எ - ம், 4கோமான்கூறாய், இறைவன் கூறாய்,
வெற்பன்கூறாய், அருவாளன்கூறாய், பார்ப்பான்கூறாய் எ - ம், “பார்ப்பன மகனே
பார்ப்பன மகனே” (குறுந். 156), “எம்மானே தோன்றினாயென்னை யொளித்தியோ”
(சீவக. 1801) எ - ம், அடிகள்கூறீர், கோமாள் கூறீர் எ - ம், “அகவன் மகளே யகவன்
மகளே” (குறுந். 23) எ - ம், மாந்தர்கூறீர், சான்றோர் கூறீர் எ - ம், இறைவரே, ஈசரே,
குழையரே, வெற்பரே எ - ம், குருசில்கூறாய், தோன்றல் கூறாய் எ - ம், “குருசிலே
யெம்மையுள்ளாய்”, திருமாலே, தோன்றலே (பெருமாள். 4 - 9) எ - ம், ஆய்கூறாய்,
எ - ம், ஆயேசொல்லாய் எ - ம் உயர்திணைப்பெயர்க்கண் விளியுருபு வந்தவாறு.

     பிதாவுரையாய், பிணாவுரையாய், தம்பிகூறாய், சாத்திகூறாய், 5கொற்றி கூறாய்,
அரசுகூறாய், அழிதூஉக்கூறாய், பேதைபேசாய், தந்தைதாராய், 6அம்மையருளாய்,
அன்னையருளாய், ஆண்கூறாய், பெண்கூறாய், சாத்தன் கூறாய், மகன்வாராய்,
மகள்வாராய், மக்கள்வாரீர், ஒதுங்கல்கூறாய், தூங்கல்கூறாய், தாய்கூறாய், சேய்கூறாய்
எ - ம், பிதாவே, பிணாவே, அரசே, அழிதூஉவே, ஆணே, பெண்ணே, சாத்தனே,
கொற்றனே, மகனே, மகளே, ஒதுங்கலே, தூங்கலே, தாயே, சேயே எ - ம், தம்பீ, சாத்தீ,
கொற்றீ எ - ம் பொதுப்பெயர்க்கண் விளியுருபுவந்தவாறு.