| 154 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | விளக்கொடியை, புறாக்கொடியை, தும்பிகொடியை, வீகொடியை, முசுக்கொடியை, வண்டுகொடியை, பூக்கொடியை, சேக்கொடியை, மழைகொடியை, நொக்கொடியை, கோக்கொடியை, வௌக்கொடியை, இதண்உரையாய், புனம் கூறாய், மான்கூறாய், வேய்கொடையை, சூர்கொடியை, வேல்கொடியை, தெவ்வலியை, யாழ்கொடியை, புள்கொடியை எ - ம், விளவே, புறாவே, தும்பியே, வீயே, முசுவே, வண்டே, பூவே, சேவே, மழையே, நொவ்வே, கோவே, வௌவே, இதணே, புனமே, மானே, வேயே, சூரே, வேலே, தெவ்வே, யாழே, புள்ளே எ - ம், மந்தீ, தும்பீ எ - ம் அஃறிணைப்பெயர்க்கண் விளியுருபுவந்தவாறு.
‘மன்’ என்ற 7மிகையானே உயர்திணைப்பெயரீற்று ஐகாரம் ஏகார மேலாதெனவும் ஏனைய ஏற்புழி ஐகாரம் திரிந்தும் திரியாதும் ஏற்பனவா மெனவுங்கொள்க.
(பி - ம்.) 1 வேற்றுமையுருபுகளாம் 2 தேவி 3 கன்னியே 4 கோன் 5 முடத்தி 6 அம்மே, அன்னே 7 விதப்பானே | (48) | | | (305) | ஐயிறு பொதுப்பெயர்க் காயு மாவும் உருபா மல்லவற் றாயு மாகும். | எ - ன், ஐகாரவீற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) ஐகாரவீற்றுப் பொதுப்பெயர்க்கண் ஆயும் ஆவும் விளியுருபாம்; உயர்திணை அஃறிணைப்பெயர்க்கண்ணும் ஐகாரத்துக்கு ஆய் உருபாம் எ - று.
வ - று. அன்னாய், தந்தாய், 1 “ஆவன்னா வன்னா வலந்தே னெழுந்திராய்”, என விரவுப்பெயர்க்கண் இரண்டுருபும் வந்தவாறு. விடலாய், மடந்தாயென உயர்திணைக்கண்ணும், “சிறுமீன் கவுட்கொண்ட செந்தூவி நாராய்” (ஐந். எழு. 68), “கொன்றாய் குருந்தே கொடிமுல்லாய் வாடினீர்” (திணை. நூற். 81) என அஃறிணைக்கண்ணும் ஆயுருபுவந்தவாறு.
உம்மைகள் இவையுமாமென எண்ணின்கண் வந்தன.
(பி - ம்.) 1 ஆத்தாய் | (49) | | | (306) | ஒருசார் னவ்வீற் றுயர்திணைப் பெயர்க்கண் 1அளபீ றழிவய னீட்சி யதனோ டீறு போத லவற்றோ டோவுறல் ரறழிந் தோவுற லிறுதியவ் வாதல் | | | 5 | அதனோ டயறிரிந் தேயுற லீறழிந் தயலே யாதலும் விளியுரு பாகும். | எ - ன், னகாரவீற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்த்துதல் நுதலிற்று. | |
|
|