1. - பெயரியல்

155

   
     (இ - ள்.) னகாரவீற்றுயர்திணைப் பெயர்களுட்சில அளபெழுதலும், சில
ஈறுகெடுதலும், சில ஈற்றயல் நீளலும், சில ஈற்றயல் நீண்டு ஈடுகெடுதலும், சில ஈற்றயல்
நீண்டு ஈறுகெட்டு ஓகாரமிகுதலும், சில ஈறுகெட்டு ஓகாரமிகுதலும், சிலஇறுதி
யவ்வொற்றாதலும், சிலஇறுதி யகாரமாய் அயலில் ஆகாரம் ஓகாரமாய் ஏகாரமேற்றலும்,
சில ஈறழிந்து அயலில் அகரம் ஏகாரமாதலும் விளியுருபாம் எ - று.

     ‘ஒருசார்’ என்பதனை விளியதிகாரமுடியுமளவும் 2எல்லா ஈற்றுள் ளும் யாண்டும்
வருவித்துக் கண்டுகொள்க.

     வ - று. அம்பர்கிழாஅன், வல்லங்கிழாஅனெனச் சேய்மைக்கண் அளபாயின.
இறைவகேள், 3நாதகேள், “எலுவ சிறாஅ ரேமுறு நண்ப, புலவர் தோழ கேளா யத்தை”
(குறுந். 129), “பேரேமுற்றார்போல முன்னின்று விலக்குவா யாரெல்லா” (கலி. 113) என
அண்மைக்கண் ஈறழிந்தன. 4நம்பானென்பெருமானென அயல்நீண்டது. இறைவா,
மன்னா, தேவாவெனஅயல்நீண்டு ஈறுகெட்டன. ஐயாவோ அன்பாவோவெனப்
புலம்பின்கண் அயல்நீண்டு ஈறழிந்து ஓகாரமிக்கன. “திரையவோ”, ஐயவோ எனப்
புலம்பின்கண் ஈறழிந்து ஓகாரமிக்கன. குழையாய், வாயிலாய், ஆதிரையாய்,
“எண்கையாய்” (கலி. 1) கரியாய், ஊணாயென இறுதி யவ்வொற்றாயின. “வாயி லோயே
வாயி லோயே” (புறநா. 206 ; சிலப். 20 : 24) என ஈற்றயல்திரிந்து இறுதியகரம்
ஏகாரமேற்றது. “ஐயே யெமக்கீங் கருள்”, “மடவை மன்ற வாழிய முருகே” (நற். 34)
என ஈறழிந்து அயலில் அகரம் ஏகாரமாயின. பிறவும் இவ்வாறேவருவன கண்டுகொள்க.

     (பி - ம்.) 1அளவீறு 2அவ்வவ்வீற்றுள்ளும் 3 நந்த4 நம்பெருமான்

(50)

 

(307)

ளஃகா னுயர்பெயர்க் 1களபீ றழிவயல்
நீட்சி யிறுதி யவ்வொற் றாதல்
அயலி லகரமே யாதலும் விளித்தனு.

     எ - ன், ளகாரவீற்று உயர்திணைப்பெயர்க்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி
உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) ளகாரவீற்று உயர்திணைப்பெயர்க்கண் அளபெழலும் ஈறுகெடலும்
அயல்நீடலும் இறுதியகரவொற்றாய்த் திரிதலும் அயலில் அகரம் ஏகாரமாதலும்
விளியுருபாம் எ - று.

     வ - று. “மேவார்த் தொலைத்த விறன்மிகு வேஎள்” என அளபாயிற்று.
“துனிகொள்ள லெல்லா நீ” (கலி. 35) என ஈறுகெட்டது. நமர்காள், எமர்காளென
ஈற்றயல்நீண்டன. குழையாய், வாயிலாய், ஆதிரையாய், எண்டோளாய், கரியாய்,
2ஊணாயென இறுதி யகரவொற்றாயின. “தலைமீது கொள்வெ மடிகேள்” என ஈற்றயல்
அகரம் ஏகாரமாயிற்று. பிறவுமன்ன.

     (பி - ம்.) 1 அளவீறழிவு 2 உண்டாய்

(51)