| 156 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | | | (308) | ரவ்வீற் றுயர்பெயர்க் களபெழ லீற்றயல் அகரம் இஈ யாத லாண்டையா ஈயாத லதனோ டேயுற லீற்றே மிக்கயல் யாக்கெட் டதனய னீடல் | | | 5 | ஈற்றி னீருற லிவையுமீண் டுருபே. | எ - ன், ரகாரவீற்று உயர்திணைப்பெயர்க்கண் அளபெழலும் ஈற்றயலில் அகரம் இகரமாதலும் ஈகாரமாதலும் ஆகாரம் ஈகாரமாதலும் ஆகாரம் ஈகாரமாய் ஏகாரமேற்றலும், ஈற்றில் ஏகாரமிக்கு அயலில் யாக்கெட்டு அதனயலில் இகரம் ஈகாரமாதலும் ஈற்றின் ஈறு ஆதலுமென்றிவையும் விளியுருபாம் எ - று.
வ - று. “எலுவ சிறாஅ ரேமுறு நண்ப” (குறுந். 129) என அளபாயிற்று. “என்னைமுன் னில்லன்மின் றெவ்விர்” (குறள். 771) என அகரம் இகரமாயிற்று. வேந்தீர், “நாய்கீர்”, *அமரீர், அசுரீர், நாகீரென அகரம் ஈகாரமாயிற்று. சான்றீர், மடவீர், பார்ப்பீர், ஊரீரென, ஈற்றயல் ஆகாரம் ஈகாரமாயிற்று. “பல்சான்றீரே” (புறநா. 195), கணியீரே முனியீரே என ஈற்றயலில் ஆகாரம் ஈகாரமாய் ஏகாரமேற்றன. நம்பீரே, தம்பீரே, தோழீரே, தொழும்பீரேயென ஏகாரமிக்கு ஈற்றயலில் யாக்கெட்டு அதனயலில் இகரம் ஈகாரமாயின. எமரீர், பிறரீர், தமரீரென ஈரேற்றன.
இதனுள், ‘ஈண்டு’ என்றமிகையானே, கடலார், கழியார், மயிலார், குயிலார், சாத்தியார், கொற்றியாரென்றற்றொடக்கத்து அஃறிணைப்பெயர் விரவுப்பெயர்களும் சிறப்பித்து உயர்திணைபோல வழங்கப்படுதலின், ஈண்டும் கடலீரே, கழியீரே, மயிலீரே, குயிலீரே, சாத்தீரே, கொற்றீரேயென்றற்றொடக்கத்துமுடிபும் பிறவும் இவ்வாறு வருவனவெல்லாம் கண்டு கொள்க | (52) | | | (309) | லகாரவீற் றுயர்பெயர்க் களபய னீட்சியும் யகார வீற்றிற் களபுமா முருபே. | எ - ன், லகார யகாரவீற்றுயர்திணைப்பெயர்க்கு எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) லகாரவீற்று உயர்திணைப்பெயர்க்கண் அளபெழலும் அயல்நீட்சியும், யகாரவீற்று உயர்திணைப்பெயர்க்கண் அளபெழலும் விளியுருபாம் எ - று.
வ - று. “வலம்புரித் தடக்கை மாஅனின்னிறம்” எ - ம், “தோன்றால்”, “தாழ்குழால்”, “மடவரால்” எ - ம், “விளங்குமணிக் கொடும்பூ ணாஅய் நின்னாட், டிளம்பிடி” (புறநா. 130) எ - ம் வரும் | (53) | | | (310) | னவ்வீற் றுயர்திணை யல்லிரு பெயர்க்கண் இறுதி யழிவத னோடய னீட்சி. | * யா. வி. 52, மேற். | |
|
|