1. - பெயரியல்

157

   
     எ - ன், னகாரவீற்றஃறிணைப்பெயர் பொதுப்பெயர்கட்கு எய்தியதன் மேற்
சிறப்புவிதியுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) னகாரவீற்று அஃறிணைப்பெயர்க்கண்ணும் விரவுப்பெயர்க் கண்ணும்
இறுதியழிவும் இறுதியழிவதனோடு அயல்நீட்சியும் விளியுருபாம் எ - று.

     வ - று. “கொடுந்தா ளலவ குறையா மிரப்பேம்” (ஐந். ஐம். 42), “இகலுபு குதிக்கு
மிகல”, “கண்டல் வேரளை சேரல வாநீ”, 1 “கடும் பறைக் கருடா” எ - ம், சாத்தகேள்
கொற்றகேள், சாத்தாகேள், கொற்றாகேள் எ - ம் வரும்.

     (பி - ம்.) 1 கடுஞ்சிறைக்

(54)

 

(311)

லளவீற் றஃறிணைப் பெயர்பொதுப் பெயர்க்கண்
ஈற்றய னீட்சியு முருபா கும்மே.

     எ - ன், இவ்விரண்டீற்றுப்பெயர்க்கும் எய்தியதன்மேற் சிறப்புவிதி யுணர்த்துதல்
நுதலிற்று.

     (இ - ள்.) லகார ளகாரவீற்று அஃறிணைப்பெயர்க்கண்ணும் பொதுப்
பெயர்க்கண்ணும் ஈற்றயல் நீட்சியும் உருபாம் எ - று.

     வ - று. “காட்டுச்சாரோடுங்குறுமுயால்”, கிளிகாள் எ - ம், தூங்கால், 1ஓங்கால்,
மக்காள் எ - ம் வரும்; பிறவுமன்ன.

     (பி - ம்.) 1 ஒதுங்கால்

(55)

 

(312)

அண்மையி னியல்புமீ றழிவுஞ் சேய்மையின்
அளபும் புலம்பி னோவு மாகும்.

     எ - ன், உரைத்தவிளிக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்) அணியாரை விளிக்குமிடத்து இயல்பும் ஈற்றினது அழிவும்,
சேயாரைவிளிக்குமிடத்து அளபெழலும், புலம்பின்கண் ஓகாரமுமாம் எ - று.

     உதாரணம் முன்னர்க்காட்டினவற்றிற் கண்டுகொள்க.

(56)

 

(313)

நுவ்வொடு வினாச்சுட் டுற்ற னளர
வைதுத் தாந்தா னின்னன விளியா.

     எ - ன், மேல் விளியேற்குமென்ற ஈற்றுப்பெயர்களுள் இவை ஏலாவென
எடுத்துணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) நுவ்வையும் முதல்வினாக்களையும் சுட்டையுமுதலாகவுடைய னகாரமே
ளகாரமே ரகாரமே வையே துவ்வேயென்றீற்றுப் பெயர்களும் தாமென்பதும்
தானென்பதும் விளியேலா எ - று.வ - று. நுமன், நுமள், நுமர்; எவன், எவள், எவர்,
எவை, எது; ஏவன், ஏவள், ஏவர், ஏவை, ஏது; யாவன், யாவள், யாவர், யாவை, யாது;