158 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | அவன், அவள், அவர், அவை, அது; இவன், இவள், இவர், இவை, இது; உவன், உவள், உவர், உவை, உது; தாம்; தான் என்பன.
‘இன்னன’ என்றதனால், மற்றையான், மற்றையாள், மற்றையார், மற்றையவை, மற்றையதென்பனவும், எண்ணிறையளவுப்பெயர் முதலா யினவுங்கொள்க.
நுவ்வையும் செவ்வெண்ணாக எண்ணாது ஒடுக்கொடுத்து வேறோதியது, வையும் துவ்வும் அதனொடு சாராவென்பது அறிவித்தற்கெனக்கொள்க. | (57) | | (314) | முதலை யையுறிற் சினையைக் கண்ணுறும் அதுமுதற் 1காயிற் சினைக்கை யாகும். | எ - ன், இஃதோர் சொல்லுதல் 2வகைமையுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) சினைதொடர்ந்த முதற்பொருட்கு இரண்டாம் வேற்றுமையுருபுவரிற் சினைக்கு ஏழானுருபுவரும்; முதற்குஆறாமுருபுவரிற் சினைக்கு இரண்டனுருபுவரும் எ-று.
வ - று. 3யானையைக் கோட்டின்கட்குறைத்தான் எ - ம், யானையது கோட்டைக்குறைத்தான் எ - ம் வரும்.
‘ஐயுற’ என்னாது, ‘ஐயுறின்’ என்றதனால், யானையைக் கோட்டைக் குறைத்தானெனவும் வருமெனக்கொள்க.
(பி - ம்.) 1காகிற் 2வழுவமைப்புணர்த்துதல் 3ஆனையை | (58) | | (315) | முதலிவை சினையிவை யெனவே றுளவில உரைப்போர் குறிப்பின வற்றே பிண்டமும். | இதுவுமது.
(இ - ள்.) இவையேமுதல், இவையேசினையென வேறறியக் கிடப்பனவில்லை; சொல்லுவோர் குறிப்பினானே முதலே சினையுமாம்; சினையே முதலுமாம்; பிண்டப்பொருளும் அவ்வாறேயாம் எ - று.
வ - று. கோட்டதுநுனியைக்குறைத்தான் எ - ம், கோட்டை நுனிக்கட் குறைத்தான் எ - ம் சினையேமுதலுமாம். நெற்குப்பை யென்றால், நெல்லதுகுப்பை குப்பையதுநெல்லென வரும். இதில் இரண்டாவது வேறில்லாதவாறுகாண்க. | (59) | | (316) | யாத னுருபிற் கூறிற் றாயினும் பொருள்சென் மருங்கின் வேற்றுமை சாரும். | எ - ன், உருபுகள் ஒருவழித் தம்பொருண்மேலன்றி 1மயங்கி வருதலுமுடையவென வழுவமைப்புணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) யாதானும் ஓருருபினாற் சொல்லப்பட்டதே ஒரு சொல்லெனினும் அச்சொற்கு அவ்வுருபின்பொருளே பொருளென்று கொள்ளற்க; அச்சொல்லின்பொருள் எவ்வுருபிற்கேற்கும்? அவ்வுருபாகக்கொள்வதே முறை எ - று. | |
|
|