1. - பெயரியல்

159

   
     வ - று. “கிளையரி னாணற் கிழங்குமணற் கீன்ற, முளையோ ரன்ன
முள்ளெயிற்றுத் துவர்வாய்” (அகநா. 211) என நான்காம்வேற்றுமைவந்ததாயினும்,
அதனை ஏழாம்வேற்றுமையாகக் கொள்க. “நாகு வேயொடு நக்கு வீங்குதோள்.”
இதனுள், ஒடுவை ஐயாகக்கொள்க. “அறிவுடையந்தண னவளைக்காட் டென்றானோ”
(கலி. 74) இதனுள், ஐயைக் குவ்வாகக் கொள்க. பிறவுமன்ன.

     இஃது உருபுமயக்கம்; பொருண்மயக்கம் தொகை சொல்லுழிச் சொல்லுதும்.

     (பி - ம்.) 1 மருங்கின்வருதலும்

(60)

 

(317)

ஐயான்குச் செய்யுட் கவ்வு மாகும்
ஆகா வஃறிணைக் கானல் லாதன.

     எ - ன், அவ்வுருபுகள் செய்யுளுட்டிரியவும் பெறுமென்பது உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) ஐயும் ஆனும் குவ்வுமென்னுமூன்றுருபும் செய்யுட்கண்
அகரமாகிநிற்கவும் பெறும்; அஃறிணைக்கண் ஐயும் குவ்வும் திரியாவாம் எ - று.

     ‘ஆகா வஃறிணைக் கானல் லாதன’ எனவே மூன்றும் உயர்திணைக்
கண்ஆமென்பது தானேபோதருமென்க.

     வ - று. காவ லோனைக் களிறஞ் சும்மே எ - து, “காவலோனக் களிறஞ்
சும்மே” எ - ம், புலவரான் எ - து, “புலவரான” எ - ம், கடிநிலை யின்றே யாசிரி
யற்கு எ - து, “கடிநிலை யின்றே யாசிரி யற்க” (தொல். புள்ளி. 94) எ - ம்
மூன்றுருபும் உயர்திணைக்கண் அகரமாய்த்திரிந்தன. புள்ளினான் எ - து, “புள்ளினான”
என ஆனீறு அஃறிணைக்கட்டிரிந்தது.

     உம்மை எதிர்மறையாதலின், அவ்வாறுதிரிதல் சிறுபான்மையெனக் கொள்க.

(61)

 

(318)

எல்லை யின்னு மதுவும் பெயர்கொளும்
அல்ல வினைகொளு நான்கே ழிருமையும்
புல்லும் பெரும்பாலு மென்மனார் புலவர்.

     எ - ன், வேற்றுமைகட்கு ஆவதோர் விதியுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) எல்லைப்பொருண்மைக்கண்வரும் ஐந்தாம் வேற்றுமையும்
அதுவென்னும் ஆறாம்வேற்றுமையும் பெயரையும், ஒழிந்தன வினையையும்
வினைக்குறிப்பையும், நான்காம்வேற்றுமையும் ஏழாம்வேற்றுமையும் பெயரையும்
வினையையும் கொண்டுமுடியும் பெரும்பாலுமென்று சொல்லுவர் புலவர் எ - று.

     எழுவாய்வேற்றுமைக்கு ஆண்டே பயனிலைசொல்லுதலின், ஈண்டு
இரண்டாவதுமுதல் ஏழுக்குமே இவ்விதிசொன்னாரெனக் கொள்க.