16

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
தன் மத வாரணம் - தனக்கேயுரிய மத யானையை,திசைதொறும் நிறுவிய -
எட்டுத்திக்கிலும் எல்லைக்குறியாக நிறுத்திய, திறல்உறு தொல் சீர் -
வலியோடுபொருந்திய உலகுள்ளதான அன்று 9தொடங்கி இடையறாதுவாராநின்ற
புகழினையும், கரு கழல் - *கூடாதாரைக் கொன்று கட்டினகுரைகழலினையும்,
வெண்குடை - பற்றலர் பகரும் பழிமா 10மற்றுலகளிக்கும்மணிமுத்தக்குடையினையும்,
கார்நிகர் வண்கை - 11விழைபயன்கருதாதுமேதினியவர்க்கு மழைபோலுதவும்
மாமலர்க்கையினையும், திருந்திய செங்கோல் -குற்றமற்றுலகிற் கொடுங்கலிதுரந்து
செப்பம்வளர்க்கும்செய்யகோலினையுமுடையவனான,சீய கங்கன் - தங்கலர்குலமாம்
12வெங்கயமனுங்கும்சிங்கமாகிய கங்கனென்பான், அருகலை விநோதன் அரியநூல்களை
ஆராய்தலேதனக்கு இன்பமாகவுடையான்,அமராபரணன் - பொரும் போரினையே
புனைகலனாகவுடையானென்னும் அழகமைபெயரினையுடையான், மொழிந்தனனாக -
13ஏவ,முன்னோர் நூலின் வழியே -பழையோர்சொன்ன நூல்களின் படியே,
நன்னூற்பெயரின்- நன்னூலென்னும்14பெயரினானே, வகுத்தனன் - செய்தனன்; அவன்
யாவனெனின், -பொன் மதில்சனகை - பொன் மதில் புடைசூழ்ந்த 15சனநாதபுரத்து,
சன்மதி முனியருள்- சன்மதியென்னும் நன்முனியளித்த, பன் அரு சிறப்பின் -
சொல்லுதற்கரிய16பெருந்தன்மையையும், பவணந்தி என்னும் நாமத்து -
பவணந்தியென்னும்பெரிய பெயரினையும், இருதவத்தோன் - பெரிய
தவத்தினையுமுடையோன் எ - று.
     ‘மலர்தலை * * * * * மொழியுளும்’ எனவே இயம்பலுறும் தமிழ் தான், இடையே
சிலரான் இயற்றப்பட்டதன்றி வரம்பிலறிவனால் ஏனைப்பதினேழுநிலத்து மொழிகளோடு
ஒருங்குவிளங்கச் செய்யப்பட்டதென்று இதன் உண்மைச்சிறப்பு உரைக்கப்பட்டது.
     ‘குணகடல் * * * * * எல்லையின்;’ இஃது இவ்வெல்லையுள் நடக்குமென எல்லை
போந்தது.
     ‘இருந்தமிழ் * * * * * ஐந்தையும்’ என 17நுதலிய பொருள் போந்தது.
     ‘யாவரு முணர:’ எல்லாருமுணர்தல் பயனாகவெனப் பயன் போந்தது.
     ‘தொகைவகை விரி’ என யாப்புப் போந்தது.
     ‘தருகென * * * * * மொழிந்தனனாக:’ அருங்கலை விநோதனாகையாலே
தமிழின் அருமைபெருமைகளையறிந்து      எல்லாரும் இனிதறிய
விளங்கச்செய்கவென்று இவன் ஏவுதலாலேயெனக் காரணம் போந்தது.
     ‘முன்னோர் நூலின் வழியே’ என வழி போந்தது.
     ‘நன்னூற் பெயரின் வகுத்தனன்’ என நூற்பெயர் போந்தது.
     ‘பொன்மதில் * * * * * தவத்தோனே’ என ஆக்கியோன் பெயர் போந்தது.

     * உரைநடை கட்டுரைச்சுவைபட அமைந்துநிற்றல் பாராட்டற்பாலது.