160 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | வ - று. கருவூரின் கிழக்கு, மருவூரின் மேற்கு எ - ம், சாத்தனது குணம், சாத்தனதுகை, நெல்லதுகுப்பை, படையது குழாம், எள்ளதுசாந்து, சாத்தனதாடை எ - ம் பெயர்கொண்டன. அறத்தை ஆக்கும், மறத்தை மாற்றும், 1குருவைச்சேரும், தாயை ஒக்கும், எ - ம், கொழுநனை இலள்; எம்மையின்றிப் பொன்னையுடையன் எ - ம் இரண்டாவதுவினையும் வினைக்குறிப்பும் கொண்டது. சுடரினாற்கண்டான், அரசனாற்பெற்றான், சாத்தனொடு வந்தான்எ - ம், கல்வியால் நல்லன், அரசனாற்செவ்வியன் எ - ம் மூன்றாவது வினையும் வினைக்குறிப்புங்கொண்டது. மலையினிழிந்தான், பொன்னிற்றிகழும், வாளின்வணக்கினான் எ - ம், இதனின்வெளிது (நீங்கல்), காக்கையிற்கரியன் (ஒப்பு), அறிவிற்பெரியன் (ஏது) எ - ம் ஐந்தாவது வினையும் வினைக்குறிப்பும்கொண்டது. இறைவகூறாய், மன்னவாராய், சாத்ததாராய்; கொற்றகொள்ளாய், நிலனேநில்லாய், புலனே போகாய் எ - ம், இறைவ கொடியை, மன்ன வலியை, சாத்தநெடியை, கொற்றகொடியை, நீரே தண்ணியை, தீயேவெய்யை எ-ம் எட்டாவது வினையும் வினைக்குறிப்புங் கொண்டது. நாகர்க்குப்பலி, வளைக்குப்பொன், கரும்பிற்குவேலி எ - ம், இரவலர்க்கீந்தான், பொருட்குப்போயினான் எ - ம், மறுமைக்கு நன்று, அவர்க்கினிது எ - ம் நான்காவது முறையானே பெயரும் வினையும் வினைக் குறிப்புங்கொண்டது. மணியின்கண்ஒளி, மலரின்கண் வண்டு; மலையின் கண் ஓக்கம், பனையின்கண் அன்றில் எ - ம், அரங்கின்கண் அகழ்ந்தான், 2யாண்டின்கட் சென்றான் எ - ம், நாட்டின்கண் நன்று, கூதிர்க்கண் உள்ளது, விலங்கின்கட் கொடிது எ - ம் ஏழாவது முறையே பெயரும் வினையும் வினைக்குறிப்பும் கொண்டது.
‘பெரும்பாலும்’ என்றதனால், ஆறாவது வினையும் வினைக்குறிப்பும் கொண்டும், அல்லன வினையும் வினைக்குறிப்பும் பற்றிய பெயர்கொண்டும் முடியவும் பெறுமெனக்கொள்க.
வ - று. சாத்தனதுவந்தது, சாத்தன வந்தன எ - ம், சாத்தனது நன்று, சாத்தன நல்லன எ - ம் ஆறாவது வினையும் வினைக்குறிப்பும் கொண்டது. அறத்தை அடைந்தவன், மறத்தை மறந்தவன், திருவைச்சேர்ந்தவன் எ - ம், பொருளைஉடையவன், புதல்வனை இல்லவன், அறத்தைஆக்கல், மறத்தைமாற்றல் எ - ம், இரண்டாவது வினையும் வினைக்குறிப்பும்பற்றிய பெயர்கொண்டது. சுடரினாற் கண்டவன், அரசனாற்பெற்றவன், நெய்யானுகர்ந்தவன் எ - ம், குணத்தாற்பெரியவன், இனத்தாற்செவ்வியவன், அரசனாற்பெறுதல், வாளால்வணக்குதல் எ - ம் மூன்றாவது வினையும் வினைக்குறிப்பும் பற்றிய பெயர்கொண்டது. இரவலர்க்கீந்தவன், பொருட்குப்போனவன் எ - ம், எனக்கினியவன், அவர்க்கு நல்லவன், இரவலர்க்கீதல் எ - ம், நான்காவது வினையும் வினைக்குறிப்பும் பற்றிய பெயர்கொண்டது. மலையின் இழிபவன், மன்னரில் வாழ்ந்தவன், பொன்னிற்றிகழ்பவன், வாளியிற்செகுத்தவன் எ - ம், காக்கையிற்கரியவன், அறிவிற் பெரியவன், வாளியிற் செகுத்தல் எ - ம் ஐந்தாவது வினையும் வினைக்குறிப்பும்பற்றிய பெயர்கொண்டது. அரங்கின்கண் அகழ்ந்தவன், ஆகாயத்தின்கட்சென்றவன், | |
|
|