2. - வினையியல்

161

   
ஆண்டின்கட்போனவன், குணத்தின்கண் ஒழிந்தவன் எ - ம், நாட்டின்கண்நல்லது,
கூதிர்க்கண் உள்ளது, வாளின்கண்உள்ளது, அரங்கின்கண் அகழ்தல்,பரணிக்கட்
பிறத்தல் எ - ம் ஏழாவது வினையும் வினைக் குறிப்பும்பற்றியபெயர்கொண்டது.

     நான்காவதற்கும் ஏழாவதற்கும் இவ்விலேசினானே இருமையும் கொள்ளுமென்பது
பெறலாகவும் எடுத்தோதியது, இலேசாற்பெறுவன இவ்வாறு அருகிவருவனவென்பது
அறிவித்தற்கெனக்கொள்க.

     தச்சனாற்செய்தமாடம், வாளாற்கொண்டகொடி என்பனவும் பெயர்
கொண்டனவன்றோ வெனின், அவை செய்த கொண்டவென்னும் பெயரெச்சவினை
கொண்டனவெனக்கொள்க.

     (பி - ம்.) 1 (1) திருவினைச், (2) சீரினைச் 2 ஆண்டின்கட்

(62)

முதலாவது பெயரியல் முற்றிற்று.
 

இரண்டாவது
 

வினையியல்
 

 

(319)

செய்பவன் கருவி நிலஞ்செயல் காலம்
செய்பொரு ளாறுந் தருவது வினையே.

     என்பதுசூத்திரம்.

     இவ்வோத்து என்னுதலிற்றோவெனின், ஓத்துநுதலியதூஉம் ஓத்தினது
பெயருரைப்பவே விளங்கும். ஆயின், இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின்,
வினைச்சொற்களது இயல்புணர்த்திற்றாதலான், வினையியலென்னும் பெயர்த்து.
மேலோத்தினோடு இதற்கு இயைபு என்னையோவெனின், மேற் பெயர் வினை இடை
உரியெனச் சொல்லை நான்காக்கி, அவற்றுட் பெயர்க்கு இலக்கணம்
முன்னருணர்த்தினார், அதன்பின்னர் வினைக்கு ஈண்டு உணர்த்துகின்றாராகலின்,
இதனோடு இயைபுடைத்தென்க.

     இதனுள், இத்தலைச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், பொது வகையான்
வினைச்சொல்லாவது இன்னதென்பது உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) கருத்தாவும் கருவியும் நிலனும் தொழிலும் காலமும்
செயப்படுபொருளுமென்னும் ஆறுபொருளையும் விளக்குவது, வினைச்சொல்லாவது எ-று.

     ‘செய்பவன்’ என்று ஒருபால்மேல் வைத்தாரேனும், “ஒரு மொழி யொழிதன்
னினங்கொளற் குரித்தே” என்பதனால், ஐந்து பாற்கண்ணும்