162 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | கொள்க. செய்பவனென்றும், கருவியென்றும் பொதுப்படவைத்தமை யான் ஏவற்கருத்தாவும் கருமக்கருத்தாவும், முதற்காரணமும் துணைக் காரணமுங்கொள்க.
‘ஆறும்’ என்புழி உம்மை முற்றும்மை.
வ - று. வனைந்தானென்புழி, கருமக்கருத்தாவும், மண்ணென்னும் முதற்கருவியும், 1திரிகையும் கோலுமுதலான துணைக்கருவியும், அகத்தானும் புறத்தானுமென்னும் இடமும், வனைதலென்னும் தொழிலும், வனைந்தானென்னும் இறந்தகாலமும், குடத்தொடக்கத்தன வென்னும் செயப்படு பொருளுமான ஆறும் முறையே விளங்கினவாறு காண்க.
“முற்றும்மை யொரோவழி யெச்சமு மாகும்” என்பதனானே எச்சமாக்கி, அதனானே இவற்றுட் சில குன்றிவரப்பெறுமென்பதும், 2இன்னதற்கென்பதும் இதுபயனாகவென்பதுங்கூட்டி எட்டும் தருமென்பார்கருத்தும் அறிந்துகொள்க.
கொடியாடிற்று, கொடிதுஞ்சுமென்றற் றொடக்கத்தவற்றுட் சில குறைந்துவந்தவாறு காண்க.
இன்னதற்கென்பதும், இதுபயனாகவென்பதும் ‘வனைந்தான்’ என்றதனுள் வந்தவாறு காண்க.
இவை அத்துணைச் சிறப்பிலவென்று யாவரும் ஒப்ப வேண்டாமையின், 3விதப்பினாற் றழீஇயினாரென்க.
வனைவித்தானென்பது 4ஏவற்கருத்தாவெனக்கொள்க. பெயரெச்ச வினையெச்சங்களும் வினையேயாகலின், இவ்வாறும் தரல்வேண்டும் பிறவெனின், அவை செய்த செய்து என எச்சமாய்நின்றே கருவிமுதலைந் தையுந்தோற்றிப் பின்னர்த் தம்மெச்சமான பெயர்வினைகளை ஏற்றவாறே கருத்தாவையும் காட்டுமென்பாருமுளர்; அற்றன்று; அவை மேலேவிதந் தோதுவாரென்க. அஃதேல், இவ்வாறனையும் தருவதனை வினைச்சொல் லென்னுமாறென்னை? வினையை விளம்புஞ்சொல் வினைச்சொலென்றன்றோ முடிவதெனின், அஃதே! நன்றுசொன்னாய்; 5வினையும் கருத்தாவுமொழிந்த நான்கும் உளவழி வினையுளதாமென்னுநியதியில்லை; யாண்டு ஓர்வினை யுண்டு? ஆண்டு அவ்வேனையைந்தும் உளவாதல் ஒருதலை; அதனான், அச் சிறப்பு நோக்கி வினைச்சொல்லெனவே படுமெனக்கொள்க. இதற்கு, “கால மறிதொழில் கருத்தனோ டியையப், பால்வகை தோறும் படுமொழி வேறே” எ - ம், “வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது, நினையுங் காலைக் காலமொடு தோன்றும்” (தொல். வினை. 1) எ - ம் சொன்ன அவிநயனார் கருத்தும், தொல்காப்பியனார் கருத்தும் அறிந்துகொள்க.
(பி - ம்.) 1திருகையும் 2இன்னதற்குக் கொடுக்கவென்பதும் இது கொடுக்க இன்னதுபயக்குமென்னும் பயனும் இதனுள் வந்தவாறுகாண்க. 3ஆதியிற்சொல்லாது விதப்பினாற் 4ஏவற்கருத்தாவாகக் 5வினையும் செயப்படு பொருளுமொழிந்த | (1) | |
|
|