164

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     எ - ன், நிறுத்தமுறையானே 1இருமுற்றுக்கும் இலக்கணமுணர்த்து தல்நுதலிற்று.

     (இ - ள்.) மேல் வினைக்கெல்லாம் பொதுவாகச்சொன்ன கருத்தன் முதல்
ஆறுபொருளையுங்காட்டிப் பொருட்பெயர் முதலான ஆறுபெயரையு மேற்றுப் பின்னர்
வேறொன்றையும் வேண்டாதுநிற்பன, முற்றுவினைச்சொல் எ - று.

     வ - று. செய்தனனவன், செய்தனளவள், செய்தனரவர், செய்தது அது, செய்தன
அவை; 2செய்தனன்யான், செய்தனம்யாம்; செய்தனைநீ, செய்தனிர்நீயிர் எ - ம்,
செய்கின்றனனவன், செய்கின்றனளவள், செய் கின்றனரவர், செய்கின்றது அது,
செய்கின்றன அவை; 3செய்கின்றனன் யான், செய்கின்றனம்யாம்; செய்கின்றனைநீ,
செய்கின்றனிர்நீவிர்எ - ம், செய்குவனவன், செய்குவளவள், செய்குவரவர்,
செய்குவதுஅது, செய்குவ அவை; செய்குவேன்யான், செய்குவேம்யாம்: செய்குவைநீ,
செய்குவிர் நீயிர் எ - ம் வினைமுற்று மூவிடத்தும் முக்காலத்தும்வந்தவாறு.
வினைக்குறிப்புமுற்று: குழையினனவன், குழையினளவள், குழையினரவர், குழையிற்று
அது, குழையின அவை; குழையினேன்யான், குழையினேம் யாம்; குழையினைநீ,
குழையினீர்நீவிர், செலவினீர் நீவிர் என மேற்காட்டினவே கொள்க.

     செய்தனனெனவே திணையும் பாலும் இடமும் கருத்தன்முதலாறும் தோற்றி,
அவனென்னும் பெயரேற்றவாறும், 4பெயர்ப்பின் வேறொன்றையும் வேண்டாதவாறும்
காண்க.

     குளிர்ந்ததுநிலம், வந்ததுகார், இற்றதுகை, பரந்ததுபசப்பு, வந்தது போக்கென
இடமுதற்பெயரேற்றவாறு காண்க.

     இதனுள் திணைபாலிடங்கள் தோன்றுமென்ற 5தில்லையாலோவெனின், அவை
கருத்தாத்தோன்றவே தோன்றுமாதலின், அமையுமென்க. அஃதேல்,
தன்மைமுன்னிலைவினைமுற்றுக்களில் திணைபால்தோன்றாமையின்,
விதந்தோதல்வேண்டும்பிறவெனின், 6அஃதே! அதுவும், போனவோத்தினுள், “படர்க்கை
வினைமுற்று நாமங் குறிப்பிற், பெறப்படுந் திணைபா லனைத்து மேனை, இடத்தவற்
றொருமை பன்மைப் பாலே” எனச் சொன்னாரென்க.

     முற்றிநிற்றலான் முற்று; “மற்றுச்சொன் னோக்கா மரபினவனைத்து, முற்றி நிற்பன
முற்றியன் மொழியே” என்றார், அகத்தியனார்.

     (பி - ம்.) 1முற்றுக்கு 2செய்தனேன்யான், செய்தனேம்யாம்3
செய்கின்றேன்யான், செய்கின்றேம்யாம் 4வேறொன்றை 5தில்லை யாலெனின்6
அஃதேலதுவும்

(4)