2. - வினையியல்

165

   
 

(323)

ஒருவன்முத லைந்தையும் படர்க்கை யிடத்தும்
ஒருமை பன்மையைத் தன்மைமுன் னிலையினும்
முக்கா லத்தினு முரண முறையே
மூவைந் திருமூன் றாறாய் முற்று
 

5

வினைப்பத மொன்றே மூவொன் பானாம்.

     எ - ன், முற்றுவினையின் வகையும் தொகையுமுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பலவென்னும் ஐம்பாலையும்
படர்க்கையிடத்தும் ஒருமை பன்மைப்பால்களைத் தன்மையிடத்தும் முன்னிலையிடத்தும்
முக்காலங்களாலுமாற முறையே படர்க்கைவினைமுற்றுப் பதினைந்தும்
தன்மைவினைமுற்று ஆறும் முன்னிலைவினைமுற்று ஆறும் ஆக வினைமுற்றொன்றே
இருபத்தேழுகூறாம் எ - று.

     எனவே இதனானும் தன்மைமுன்னிலைகளில் ஒருமை பன்மைப்பால்களல்லது
ஏனைப்பால்கள் இல்லையென்பதுமாயிற்று.

(5)

 

(324)

அன்னா னிறுமொழி யாண்பாற் படர்க்கை.

     எ - ன், நிறுத்தமுறையானே முற்றைவிரித்துணர்த்துவான் தொடங்கினார்,
இச்சூத்திரம் ஆண்பாற்படர்க்கைமுற்றாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) இவ்விருவிகுதியையும் ஈறாகவுடையமொழிகள் ஆண்பாற் படர்க்கை
வினைமுற்றும் குறிப்புமுற்றுமாம் எ - று.

     பொதுவாகவைத்தமையான், வினையும் குறிப்புங்கொள்க.

     எச்சங்களை மேலே விதந்தோதலின், விதவாது வருவனவெல்லாம் ஈண்டு
முற்றென்றே கொள்க.

     வ - று. வந்தனன், வந்தான்; வாராநின்றனன், வாராநின்றான்; வருவன், 1வருவான்
எ - ம், பூணினன், பூணினான்; புறத்தன், புறத்தான்; ஆதிரையன், “ஆதிரையான்”
(முத். கட.), கண்ணினன், கண்ணினான்; பொன்னன்னன், பொன்னன்னான், வரவினன்,
2வரவினான் எ - ம் வினையும் குறிப்பும் வந்தன; அவனென்னும் பெயர்தந்து முடிக்க.

     (பி - ம்.) 1வருவானவன் 2வரவினானவன்

(6)

 

(325)

அள்ளா ளிறுமொழி பெண்பாற் படர்க்கை.

     எ - ன், பெண்பாற்படர்க்கைமுற்றாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) இவ்விருவிகுதியையும் ஈறாகவுடைய மொழிகள் பெண்பாற்
படர்க்கைவினைமுற்றும் குறிப்புமுற்றுமாம் எ - று.

     வ - று. வந்தனள், வந்தாள்; வாராநின்றனள், வாராநின்றாள்; வருவள்,
வருவாளென வினைமுற்று வந்தவாறு. மேலனவற்றை ளகாரமாகத் திரித்துக்