166

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
குறிப்புமுற்று வந்தவாறுங்காண்க; அவளென்னும் பெயர் தந்துமுடிக்க.
 

(7)

 

(326)

அர்ஆர் பவ்வூ ரகரமா ரீற்ற
பல்லோர் படர்க்கைமார் வினையொடு முடிமே.

     எ - ன், பல்லோர்படர்க்கைமுற்றாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) இந்நான்கு 1விகுதிகளையும் ஈறாகவுடையமொழிகள் பல்லோர்படர்க்கை
வினைமுற்றும் குறிப்புமுற்றுமாம்; மார் வினைகொண்டு 2முடிவதாம் எ - று.

     வ - று. வந்தனர், வந்தார்; வாராநின்றனர், வாராநின்றார்; வருவர், வருவாரென
வந்தவாறு. மேற்காட்டின னகார ளகார வீற்றை ரகாரமாகத்திரித்துக் குறிப்புமுற்று
வந்தவாறு காண்க; அவரென்னும் பெயர் கொணர்ந்து முடிக்க.

     ஒப்ப, உரைப்ப, சொல்லுப, புல்லுப எ - ம், 3 “ஆகொண்மார்வந்தார் 4பூக்குழாய்”
எ - ம் பவ்வூர் அகரவீறும், மாரீறும் வந்தன. “விழுக்கோட் பலவின் 5பழுப்பயன்
கொண்மார், குறவ ரூன்றிய குரம்பை புதைய” (அகநா. 12) என்பது குறவரென்னும்
பெயர்கொள்ளாது ஊன்றியவென்னும் பெயரெச்சவினைகொண்டது.

     ‘வினையொடும்’ என்ற உம்மையான், “பெரிய வோதினுஞ் சிறிய வுணராப்,
பீடின்று பெருகிய திருவிற், பாடின் மன்னரைப் பாடன்மா ரெமரே” (புறநா. 375) எனப்
பெயரொடுமுடிதலும் கொள்க.

     ஒப்ப, உரைப்பமுதலானவை, ஒப்பவை, உரைப்பவையெனப் பெயர்ப்படின், அவை
அஃறிணைப்பன்மைப் பெயராமென்க.

      “காலமொடு கருத வரினு மாரை, மேலைக் கிளவியொடு வேறுபா டின்றே”
என்பது அகத்தியம்.

     (பி - ம்.) 1மொழிகளையும் 2முடிவதுமாம் 3ஆர்த்தார்கொண்மார்4பூங்குழாய்
5 பழூஉப்பயன்

(8)

 

(327)

துறுடுக் குற்றிய லுகர வீற்ற
ஒன்றன் படர்க்கைடுக் குறிப்பி னாகும்.

     எ - ன், அஃறிணையொருமைப்படர்க்கை முற்றாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) இம்மூன்று குற்றியலுகர வீற்றுமொழிகளும், அஃறிணை
யொருமைப்படர்க்கை வினைமுற்றும் குறிப்புமுற்றுமாம்; அவற்றுள், டுவ்வீறு
வினைக்குறிப்பின்கண்ணே வரும் எ - று.

     வ - று. வந்தது, வாராநின்றது, வருவது; கூயிற்று, தாயிற்றுஎ - ம், பெயர்த்து,
ஊர்த்து, கார்த்து, மயிர்த்து, கரிது, 1நடைத்து; பாற்று, மேற்று, வேனிற்று, தோடிற்று,
சுழியிற்று, செலவிற்று எ - ம் துறுக்கள் ஈரிடத்தும்