2. - வினையியல்

167

   
வந்தவாறு. பலபொருட்டு, ஆதிரைநாட்டு, குண்டுகட்டு என டுக்குறிப்பு முற்று வந்தது;
‘அது’ என்னும் பெயர்தந்து முடிக்க.

     (பி - ம்.) 1நடைத்துஅது, எ - ம், பாலிற்றுமேலிற்று.

(9)

 

(328)

அஆ வீற்ற பலவின் படர்க்கை
ஆவே யெதிர்மறைக் கண்ண தாகும்.

     எ - ன், அஃறிணைப்பன்மைப் படர்க்கைமுற்றாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) அகரஆகாரங்களை விகுதியாகவுடைய மொழிகள்
அஃறிணைப்படர்க்கைப்பன்மை வினைமுற்றும் குறிப்புமுற்றுமாம்; அவற்றுள், ஆகாரவீறு
எதிர்மறுத்துரைக்குமிடத்தே வரும் எ - று.

     வ - று. வந்தன, வாராநின்றன, வருவன; 1வாரா எ - ம், பொருள, மேல, நாள,
கண்ண, கடிய, செயல எ - ம் வரும்; அவையென்னும்பெயர் தந்துமுடிக்க.

     வவ்வீறு அகரவீறாயடங்குதலானும், கள்ளீறு தானேநின்று ஒருவினைக்கீறாய்
2வாராமையானும் ஈண்டுக்கொண்டிலரென்க. அஃதென்னை? உண்டார்கள், உண்மின்கள்,
உண்டேங்கள், “கற்றனங்கள் யாமுமுடன் கற்பனக ளெல்லாம்” (சீவக. 1795) எ - ம்,
உண்ணுங்கள், உறங்குங்கள், “கழல்களார்க் குங்களே கலங்கிமே கக்குழாம், பொழில்கள்
வெள்ளத் திடைப் புரளநூ றுங்களே” (சூளா. சீய. 167), 3 “பெயரீய்ந்தவண்கை
பெரியபழுக்குங்களே” எ - ம் இருதிணைக்கண்ணும் கள்ளீறு ஈரிடத்தும்
வருமாலோவெனின், உயர்திணைக்கண் முன்னின்ற அர் ஆர் முதலானவையே பால்
விளக்கும்; அஃறிணைக்கட் செய்யுமென்னு நிகழ்காலவினைமுற்று ஒருமைபன்மைகட்குப்
பொதுவாதலான், அதனாலேவிளங்காத ஒருமை பன்மை, “பொதுப்பெயர் வினைகளின்
பொதுமை நீக்கு, மேல் வருஞ் சிறப்புப் பெயர்வினை தாமே” என்பதனான்
விளங்குமென்க.

     (பி - ம்.) 1வாராஅவை 2வாராமலானும் 3(1) பெரீநதனவணகை; (2)
பெரிதீததவணமைபெரிய

(5)

 

(329)

தன்மை முன்னிலை வியங்கோள் வேறிலை
உண்டீ ரெச்ச மிருதிணைப் பொதுவினை.

     எ - ன், பொதுவினையைத் தொகுத்துணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) தன்மைமுன்னிலைவினைமுற்றும் வினைக்குறிப்புமுற்றும், வியங்கோளும்,
வேறு இல்லை உண்டு என்னும் மூன்று வினைக்குறிப்பு முற்றும்,
பெயரும்வினையுமெஞ்சும் இரண்டெச்சமும் ஆகிய எட்டும் இருதிணைக்கும் பொதுவான
வினைகளாம் எ - று.

     வியங்கோளென்பது ஏவல்.

(11)