168

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
 

(330)

குடுதுறு வென்னுங் குன்றிய லுகரமோ
டல்ல னென்னே னாகு மீற்ற
இருதிணை முக்கூற் றொருமைத் தன்மை.

     எ - ன், நிறுத்தமுறையானே 1இருதிணைமுக்கூற்றொருமைத் தன்மை வினை
வினைக்குறிப்புமுற்றாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) இவ்வெட்டுவிகுதிகளையும் ஈறாகவுடைய மொழிகள் இருதிணையவான
ஒருவன் ஒருத்தி ஒன்றென்னும் மூன்று ஒருமைத்தன்மையை யுணர்த்தும் வினைமுற்றும்
வினைக்குறிப்புமுற்றுமாம் எ - று.

     வ - று. உண்கு, கோடு, வருது, சேறு; உண்பல்; உண்டனன், உண்ணாநின்றனன்,
உண்பன்; உண்டனென், உண்ணாநின்றனென், உண்குவென்; உண்டேன்,
உண்ணாநின்றேன், உண்பேன் எ - ம், தாரினேன், ஈண்டையேன், பண்டையேன்,
காலினேன், சிறுமையினேன், 2செயலினேன் எ - ம் வினைமுற்றும்
வினைக்குறிப்புமுற்றும் வந்தன; யானென்னும்பெயர் தந்துரைக்க.

     தன்மைக்கண்ணும் அன்விகுதி கொள்ளாதொழியின், “எழுத்தசைசீர், பந்த
மடிதொடை பாவினங் கூறுவன்” (யா. கா. கடவுள் “தாதிவர் தாமரைத் தடமல
ரொதுங்கிய, ஆதியை வணங்கி யறைகுவ னெண்ணே”, “கல்லாப்புன் மாக்கள் கவற்ற
விடுவனோ” (நாலடி. 45), “நின்னறநெறி தலைப்பட்டன 3னிந்நெறி யிருநிலம் பிறழினும்
4பிறழலன்” என வரும் இத்தொடக்கத்தன 5முடியாவென்க.

     (பி - ம்.) 1இருதிணைத்தன்மை யொருமை வினைமுற்றும் வினைக்குறிப்புமுற்றும்
2செய்கையினேன் 3நின்னெறி 4பிழையலன் 5கிடையா.

(12)

 

(331)

அம்மா மென்பன முன்னிலை யாரையும்
எம்மே மோமிவை படர்க்கை யாரையும்
உம்மூர் கடதற விருபா லாரையும்
தன்னொடு படுக்குந் தன்மைப் பன்மை.

     எ - ன், உளப்பாட்டுத் தன்மைப் பன்மைவினையும் வினைக்குறிப்பு முற்றுமாமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) இவ்வொன்பது விகுதியீற்றுமொழிகளும் இவர்களைத் தன்னொடுபடுக்கும்
தன்மைப்பன்மைவினையும் வினைக்குறிப்பு முற்றுமாம் எ - று.

     வ - று. உண்டனம், உண்ணாநின்றனம், 1உண்குவம்; உண்டாம்,
உண்ணாநின்றாம், உண்பாம்; உண்டனெம், உண்ணாநின்றனெம், உண்குவெம்,
உண்டேம், உண்ணாநின்றேம், உண்பேம்; உண்டோம், உண்ணா நின்றோம், உண்போம்;
உண்கும், உண்டும், வருதும், சேறும் எ - ம், தாரினம், 2ஊரினம், பண்டையம்,காலினம், கரியம்,