செய்கையம் எ - ம் வினை வினைக்குறிப்பு முற்றுவந்தன; யாமென்னும் பெயர் வருவித்து முடிக்க.
ஓம் விகுதியையும் வழக்குண்மையிற் கொண்டாரென்க.
(பி - ம்.) 1உண்பம் 2ஆண்டையம், நாளினம் | (13) | | | (332) | செய்கெ னொருமையுஞ் செய்குமென் பன்மையும் வினையொடு முடியினும் விளம்பிய முற்றே. | எ - ன், எய்தியது இகந்துபடாமற் காத்தல் நுதலிற்று.
(இ - ன்.) செய்கு, செய்குமென்னும் இவையிரண்டும் வினைகொண்டு முடியும்; முடிந்தாலும் வினையெச்சமெனப்படா; தன்மை முற்றே ஆம் எ - று.
வ - று. உண்குவந்தேன், உண்கும்வந்தேமெனவரும்.
உம்மை எண்ணின்கண்ணதாகக்கொள்க.
“முற்றுச் சொற்றாம் வினையொடு முடியினு, முற்றுச்சொ லென்னு முறைமையிற் றிரியா” என்பது அகத்தியம். | (14) | | | (333) | முன்னிலை கூடிய படர்க்கையு முன்னிலை. | எ - ன், தன்மையோடுகூடிய முன்னிலைபடர்க்கைகள் தன்மையான் முடிந்தன; முன்னிலையோடுகூடிய படர்க்கை எம்முடிபிற்றாமென்று ஐயுறுவார்க்கு ஐயமறுத்தல் நுதலிற்று.
(இ - ள்.) முன்னிலைகூடிய படர்க்கையையும் முன்னிலையால் முடிக்க எ - று.
வ - று. அவனும் நீயும் போமின், அவரும் நீரும் வம்மின்எ - ம், “ஒண்டூவி நாராய்நின் சேவலு நீயுமாய், வண்டூது 1பூங்கானல் வைகலுஞ் சேறிரால்”, “நின்ன கண்ணியு மார்மிடைந் தன்றே, நின்னொடு, பொருவோன் கண்ணியு மார்மிடைந் தன்றே, ஒருவீர் தோற்பினுந் தோற்பதுங் குடியே, இருவீர் வேற லியற்கையு மன்றே” (புறநா. 45) எ - ம் ஈரிடத்தும் வரும்.
(பி - ம்.) 1பூங்கானம் | (15) | | | (334) | ஐயா யிகர வீற்ற மூன்றும் ஏவலின் வரூஉ மெல்லா வீற்றவும் முப்பா லொருமை முன்னிலை மொழியே. | எ - ன், முன்னிலையொருமைவினையும் வினைக்குறிப்பும் உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) இம்மூன்று விகுதியீற்றனவானமுற்றும், ஏவலின்வரும் இருபத்துமூன்றீற்றவான மொழிகளும் ஒருமைமுப்பாலையும் உணர்த்தும் முன்னிலைவினை வினைக்குறிப்புமுற்றுக்களாம் எ - று. | |
|
|