‘துன்னாரிகலறநூறி * * * * * மொழிந்தனனாக’ எனவே இவன்காலத்தெனவும் இவன் அவைக்களத்தெனவும் இவன் அவையிலுள்ளார் கேட்டாரெனவும் காலமும் களனும் கேட்டாரொடும் போந்தன. இவ்வாற்றான் இதற்குப் பதினொருபாயிரமும் போந்தவாறு இதனகத்தே கண்டுகொள்க. (பி - ம்.) 1 முதலிய 2 உலகெல்லாம் தான் ஒருவனுமேயாகி 3 ஆர்வும்; ஆசையும் 4 அறம்பொருளின்ப மனைத்தையும் 5 பதினெண்ணிலத் துள்ளாரும் 6 எல்லைக்கும் 7 தமிழென்னும் 8 பெரிய 9 துடங்கி 10 முற்றுலகு 11 விளைபயன்; வினைப்பயன் 12 வெங்கயநுங்குஞ் 13 அவனேவ 14 பெரிய பெயரினானே 15 சனநாகபுரத்து; சனகாபுரத்து 16 பெருந்தன்மையையுடைய 17 தமிழ்ப்பொருள் நுதலிற்றென்பது. | நன்னூற்சிறப்புப்பாயிரமுற்றிற்று.* | முதலாவது | எழுத்ததிகாரம் | 1. - எழுத்தியல் கடவுள்வணக்கமும் அதிகாரமும் | | (55) | பூமலி யசோகின் புனைநிழ லமர்ந்த நான்முகற் றொழுதுநன் கியம்புவ னெழுத்தே. | எ - து சூத்திரம். இவ்வதிகாரம் 1என்னுதலி எடுத்துக்கொள்ளப் பட்டதோ வெனின், அதிகார நுதலியதூஉம் அதிகாரத்தினது பெயருரைப்பவே விளங்கும். ஆயின், இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோவெனின், எழுத்திலக்கண முணர்த்தினமையின் எழுத்ததிகாரமென்னும் பெயர்த்து. (எழுதப்படுதலின் எழுத்தெனக் கொள்க. அதிகாரமென்றது முறைமை, எ - று. இவ்வதிகாரத்துள் எனைவகை யோத்தினான் எழுத்திலக்கண முணர்த்தினானோவெனின், ஐவகை யோத்தினான் உணர்த்தினானென்க. அவற்றுள், இம்முதலோத்து என்னுதலிற்றோவெனின், ஓத்துநுதலியதூஉம் ஓத்தினது பெயருரைப்பவே விளங்கும். ஆயின், இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின், எண் பெயர் முதலான எழுத்திலக்கணம் பத்தும் உணர்த்திற்றாகலான், எழுத்தியலென்னும் பெயர்த்து. இவ்வோத்தினுள், இத்தலைச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், ஒரு சாரார் வேண்டும் சிறப்புப் | * இதன்பின், ‘இருவகைப்பாயிரமும் ஒருவகையான் முடிந்தன’ என்னும் தொடர்மொழியொன்று சிலபிரதிகளிற் காணப்படுகின்றது. ( "எழுதப் படுதலி னெழுத்தே" (யா. வி. உரை) | | |
|
|