| 170 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | இவற்றுள் முன்மூன்றும் முன்னின்றானது தொழிலையுணர்த்துவன; ஏனைய முன்னின்றானைத் தொழிற்படுத்துவனவாம்.
வ - று. உண்டனை, உண்ணாநின்றனை, உண்குவை; உண்டாய், உண்ணாநின்றாய், உண்பாய்; உண்டி எ - ம், நட வா மடி சீ விடு கூ 1வே வை நொ போ வௌ உரிஞ் உண் பொருந் திரும் தின் தேய் பார் செல் வவ் வாழ் கேள் அஃகு எ - ம், தாரினை, தரையினை, காரினை, காலினை, வலியினை, வரவினை எ - ம் வினை வினைக்குறிப்பு முற்றுவந்தன; யாண்டும் நீயென்னும்பெயர் தந்துகொள்க.
(பி - ம்.) 1 ஏ | (16) | | | (335) | முன்னிலை முன்ன ரீயு மேயும் அந்நிலை மரபின மெய்யூர்ந்தும் வருமே. | எ - ன், மேலதற்கு எய்தியதொரு சிறப்புவிதியுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) ஒருமை முன்னிலைமொழியிடத்து ஈகாரமும் ஏகாரமும் 1தமக்கேற்ற மெய்யைஊர்ந்து 2வருவனவும் சிலவுளவாம் எ - று.
வ - று. “சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ” (அகநா. 46), “அட்டி லோலை தொட்டனை நின்மே” (நற். 300) எனவரும்.
இது, 3புணர்ச்சிவிதியன்மையின் ஈண்டே வைத்தாரென்க.
(பி - ம்.) 1அதற்கேற்ற 2வருவனசில 3வேறுசூத்திரமின்மையின் | (17) | | | (336) | இர்ஈ ரீற்ற விரண்டு மிருதிணைப் பன்மை முன்னிலை மின்னவற் றேவல். | எ - ன், முன்னிலைப்பன்மை வினையும் வினைக்குறிப்புமுற்றும் உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) இவ்விருவிகுதியீற்று மொழியிரண்டும் இருதிணை முன் னிலைப்பன்மையை யுணர்த்தும் வினை வினைக்குறிப்புமுற்றாம்; மின்னென்பது அப்பன்மையேவற்கண் வரும் எ - று.
வ - று. உண்டனிர், உண்ணாநின்றனிர், உண்குவிர்; உண்டீர், உண்ணாநின்றீர், உண்பீர்; உண்மின் எ - ம், தாரினிர், தரையினிர், காரினிர், காலினிர், வலியினிர், வரவினிர் எ - ம், தாரினீர், தரையினீர், காரினீர், காலினீர், வலியினீர், வரவினீர் எ - ம் வினை வினைக்குறிப்பு முற்றுவந்தன; நீயிரென்னும்பெயர் தந்துகொள்க. | (18) | | | (337) | கயவொடு ரவ்வொற் றீற்ற வியங்கோள் இயலு மிடம்பா லெங்கு மென்ப. | எ - ன், வியங்கோண்முற்று உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) ககார யகாரங்களையும் ரகாரவொற்றையும் ஈறாகவுடைய | |
|
|