மொழிகள் வியங்கோள்முற்றுவினையாம்; அது மூவிடத்து ஐம்பாற்கண்ணும் நடக்குமென்பர், ஆசிரியர் எ - று.
‘ரவ்வொற்று’ எனவே ஏனைய உயிர்மெய்யாம் என்க.
வ - று. “அமுத முண்கநம் 1மயலி லாட்டி” (நற். 65; குறுந். 201), “அருளிலர் கொடாமை வல்ல ராகுக” (புறநா. 27), “பெறுகதி லம்ம யானே” (குறுந். 14), “மடவ மாக மடந்தை நாமே” (குறுந். 20), “கேட்டிது மறக்க நம்பி” (சீவக. 475), “2யாவிருங்கேட்க”, “வெல்க வாழிநின் வென்றி வார்கழல், செல்க தீயன சிறக்க நின்புகழ்” (சூளா. சீய. 5) எ - ம், “யான்வாழு நாளும் 3பண்ணன் வாழிய” (புறநா. 173), “மன்னிய பெகுமநீ நிலமிசை யானை” (புறநா. 6) எ - ம், “4நடுக்கின்றி நிலியரோ வத்தை” (புறநா. 2), “5நீவா ழியர்நின் றந்தை, தாய்வா ழியர்நிற் பயந்திசி னாரே” (புறநா. 137) எ - ம் 6இடம் பாலெங்கும் வந்தன.
வியங்கோள் மூவிடத்தும்வருதலின், ஏவலுள் அடங்காதென்க.
(பி - ம்.) 1மயிலியலாட்டி 2யாவருங்கேட்க 3பாணன் 4நடுக்கின்று நிலையரோ 5நீ வாழிய 6இருதிணைக்கண்ணும் | (19) | | | (338) | 1வேறில்லை யுண்டைம் பான்மூ விடத்தன. | எ - ன், இம்மூன்றற்கும் 2பாலிடவுரிமையுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) 3வேறு, இல்லை, உண்டு என்னும் மூன்றும், ஐம்பால்களினும் மூவிடங்களினும் ஒழியாதுவரும் வினைக்குறிப்புமுற்றுக்களாம் எ - று.
வ - று. வேறவன், வேறவள், வேறவர், வேறது, வேறவை; வேறியான், வேறியாம்; வேறுநீ, வேறுநீயிர் எ - ம், இல்லைஅவன், இல்லைஅவள், இல்லைஅவர், இல்லைஅது, இல்லைஅவை; இல்லையான், இல்லையாம்; இல்லைநீ, இல்லைநீயிர் எ - ம், அவனுண்டு, அவளுண்டு, அவருண்டு, அதுவுண்டு, அவையுண்டு; யானுண்டு, யாமுண்டு; நீயுண்டு, நீயிருண்டு எ - ம் வரும்.
‘உண்டு’ என்பதனையும் இவ்வாறே பொதுவினையாகக் கொள்ளாது 4அஃறிணையொருமையாகக்கொண்டு, “தினைத்தா ளன்ன சிறுபசுங் கால, ஒழுகுநீ ராரல் பார்க்கும், குருகு முண்டுதா மணந்த ஞான்றே” (குறுந். 25) என்றற்றொடக்கத்தனவற்றைப் பன்மையொருமைப்பால் வழுவமைப்பாகக்கொள்ளின், “நாவுண்டு நீயுண்டு நாமந் தரித்தோதப், பாவுண்டு நெஞ்சே பயமுண்டோ - பூவுண்டு, வண்டுறங்குஞ் சோலை மதிலரங்கத் தேயுலகை, உண்டுறங்கு வானொருவ னுண்டு”, “பெண்டிரு முண்டுகொல் பெண்டிரு முண்டுகொல், கொண்ட கொழுந ருறுகுறை தாங்குறூஉம் பெண்டிரு முண்டுகொல், பெண்டிரு முண்டுகொல் சான்றோரு முண்டுகொல் சான்றோரு முண்டுகொல், ஈன்ற குழவி யெடுத்து வளர்க்குறூஉம், சான்றோரு முண்டுகொல் சான்றோரு முண்டுகொல்” (சிலப். 19 : 51 - 6) என்றற்றொடக்கத்தன முடியாவென்க. | |
|
|