172

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     (பி - ம்.) 1வேறுண்டில்லையைம் 2பாலிடமுணர்த்துதல் 3வேறுண்டில்லை 4(1)
அஃறிணையொருமைக்கேகொண்டு; (2) அஃறிணையொருமைக்குக்கொண்டு

(20)

 

(339)

செய்த செய்கின்ற செய்யுமென் பாட்டிற்
1காலமுஞ் செயலுந் தோன்றிப் பாலொடு
2செய்வ தாதி யறுபொருட் பெயரும்
எஞ்ச நிற்பது பெயரெச் சம்மே.

     எ - ன், நிறுத்தமுறையானே பெயரெச்சமாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) செய்த செய்கின்ற செய்யுமென்னும் வாய்பாட்டால் முக்காலமும்
தொழிலுந்தோன்றிப் 3பால்தோன்றாது, கருத்தாமுதலாகிய பொருள்களாறின்பெயரும்
ஒழியநிற்பன, பெயரெச்சவினை வினைக்குறிப்புக்களாம் எ - று.

     ‘பாட்டிற்காலமும்’ என்றது, அம்முக்கால வாய்பாடு யாவையும் கோடற்கென்க.

     வ - று. நின்றஒருவன், நிற்கின்றஒருவன், நிற்குமொருவன்; எறிந்த வேல்,
எறியாநின்றவேல், எறியும்வேல்; பொருதகளம், பொராநின்றகளம், பொருங்களம்;
செய்தசெயல், செய்யாநின்றசெயல், செய்யுஞ்செயல்; வாழ்ந்தநாள், வாழாநின்றநாள்,
வாழும்நாள்; 4பண்ணிய மா, பண்ணாநின்ற மா, பண்ணு மா எனவரும்.

     இவ்வாறே ஒழிந்தபாலிடங்களிலும் ஒட்டிப் பெயரெச்சவினை வந்தவாறு காண்க.

     கரியகொற்றன், கரியகொற்றி, கரியகொற்றர், கரியகுதிரை, கரிய குதிரைகள்,
கரியயான், கரியயாம்; கரியநீ, கரியநீயிர், “செய்ய கோலினாய் செப்ப லாவதன், றைய
தாரினா னருளின் வண்ணமே” (சூளா. சீய. 26), “பெரிய, கேழ லட்ட பேழ்வா
யேற்றை” (அகநா. 8) எனப் பெயரெச்ச வினைக்குறிப்புவந்தவாறு காண்க. ஓடாக்குதிரை,
பாடாப்பாணனென்றற் றொடக்கத்தனவும், ஓடாமலைச்செய்த,பாடாமலைச்செய்தவென்னும்
5வாய்பாடாகவேகொள்க.

      “காலமும் வினையுந் தோன்றிப்பா றோன்றாது,; 6பெயர்கொள் ளும்மது பெயரெச்
சம்மே” என்றார், அகத்தியனார்.

     இதற்கு நிகழ்காலங்கொள்ளாதார் 7கோளும் அறிந்துகொள்க.

     (பி - ம்.) 1காலஞ்செயலொடு 2செய்வதாதியும் 3பாலும்கருத்தா முதலியனவும்
பொருளாதியறுபொருட்பெயரும் 4பண்ணியமரம், பண்ணா நின்றமரம், பண்ணுமரம்
5வாய்பாட்டுட்கொள்க. 6பெயர்கொளும்மதுவே பெயரெச்சம்மே 7கொள்ளுதலும்

(21)