| | (340) | செய்யுமெ னெச்சவீற் றுயிர்மெய் சேறலும் செய்யுளு ளும்முந் தாகலு முற்றேல் உயிரு முயிர்மெய்யு மேகலு முளவே. | எ - ன், பெயரெச்சத்திற்கும் முற்றிற்கும் ஆவதோர் விதியுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) செய்யுமென்னும் பெயரெச்சச்சொற்களுட் சில மொழியீற்று உயிர்மெய் கெடுதலும், செய்யுளுட்சில உம்மை உந்தென்றாதலும், செய்யுமென்னு முற்றுவினைச்சொல்லுட் சில ஈற்றுயிரேகலும், சில ஈற்றுயிர்மெய் ஏகலுமுள எ - று.
உம்மையான், இவை இவ்வாறாதல் ஒருதலையன்றெனக் கொள்க.
வ - று. “ஆம்பொருள்க ளாகுமவை யார்க்குமழிக் கொண்ணா” (சீவக. 848), “போம்புழை”, “வாம்புரவி வழுதி” (யா. வி. சூ. 95, மேற்.), என 1இவை உயிர்மெய் கெட்டன; இவை மகரவொற்றுநிற்றலான், வினைத்தொகையாகாவென்க. “நெல்லரியு மிருந்தொழுவர், செஞ்ஞாயிற்று வெயின்முனையிற் றெண்கடற்றிரை மிசைப்பாயுந்து, திண்டிமில் வன்பரதவர்” (புறநா. 24), “நீர்க்கோழி கூஉய்ப் பெயர்க் குந்து” (புறநா. 395) என இவை உம் உந்தென்றாயின. “சாரனாடவென் றோழியுங் கலுழ்மே”, “அம்ப லூரு மவனொடு மொழிமே” (குறுந். 51), “ஆஅ மெனக்கெளிதென் றன்றுலக மாண்டவன்” (பழ. 7) என முற்றுச்சொல் உயிரும் உயிர்மெய்யும் கெட்டன, பிறவுமன்ன.
(பி - ம்.) 1ஆகும், போகும், வாவுமென்ற உயிர்மெய் | (22) | | | (341) | தொழிலுங் காலமுந் தோன்றிப் 1பால்வினை ஒழிய நிற்பது வினையெச் சம்மே. | எ - ன், வினையெச்சமாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) செயலையும் காலத்தையுங்காட்டிப் பால்தோன்றாது வினையெஞ்சநிற்பது, வினையெச்சமாம் எ - று.
வினையெஞ்சநிற்றலான் வினையெச்சமென்றார். வினையாவன: வினைமுற்றும், குறிப்புமுற்றும், பெயரெச்சமும், பெயரெச்சக்குறிப்பும், வினையெச்சமும், வினையெச்சக்குறிப்புமாமென்க.
வ - று. ஓதிவந்தான், ஓதிநல்லன் எ - ம். ஓதிப் பெற்ற பொருள், ஓதிநல்லசாத்தன் எ - ம் “உழுதுபயன் 2கொண்டு” (பு. வெ. 8 : 10) உழுதன்றி யுண்ணார் எ - ம் முறையேகாண்க.
“காலமும் வினையுந் தோன்றிப்பா றோன்றாது, வினைகொள் ளும்மது வினையெச் சம்மே” என்றார், அகத்தியனார்.
(பி - ம்.) 1 பாலற்றுவினையொழிய 2 கொண்டுவந்தான் | (23) | |
|
|