| 174 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | | | (342) | செய்து செய்பு செய்யாச் செய்யூச் செய்தெனச் செயச்செயின் செய்யிய செய்யியர் வான்பான் 1பாக்கின வினையெச் சம்பிற ஐந்தொன் றாறுமுக் காலமு முறைதரும். | எ - ன், வினையெச்சப்பகுதி யுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) செய்தென்பதுமுதலான ஒன்பதுமொழிகளின் வாய்பாட் டான்வருவனவும், வான் பான் பாக்கென்னுமூன்றும் இவைபோல்வன பிறவும் வினையெச்சப்பகுதிகளாம்; இவற்றில் முதலைந்தும் இறந்தகாலமும், இடையொன்றும் நிகழ்காலமும், ஒழிந்த ஆறும் எதிர்காலமும் காட்டுவனவாம் எ - று.
வான், பான், பாக்கை வேறெடுத்தோதியது. இவை செய்து முதலியன போலத் தாமே வினையாக நில்லாது ஒரு வினைச்சொல்லைக் கொண்டுவரும் பெயர்களாகையாலென்க.
இதனுள், ‘பிற’ என்றமிகையானே, செயவென்பது நிகழ்காலமே யன்றி, எதிர்காலமும் காட்டுமெனக்கொள்க. ‘இன்ன’ என்றதனால், “கூறா மற் குறித்ததன்மேற் செல்லுங் கடுங்கூளி” (கலி. கடவுள்)எ - ம், “கூறாமை நோக்கிக் குறிப்பறிவான்” (குறள். 701) எ - ம், இவற்றிற்கு எதிர்மறையாய் வருவனவும், “அற்றா லளவறிந் துண்க” (குறள். 943), “பெற்றாலுஞ் செல்வம் பிறர்க்கீயார்”, “நனவிற் புணர்ச்சி நடக்கலு மாங்கே” (கலி. 39), “காண்டலு மிதுவே சொல்லும்”, “செவ்வன் றெரிகிற்பான்” (தொல். பாயிரம். ந. மேற்.), “அவாவுண்டே லுண்டாம்” (குறள். 1075) என்றற்றொடக்கத்தனவும் இவ் வாய்பாடுகளிலே அடக்கிக்கொள்க. செய்தற்கென்பதுவும், பின் முன்கால் கடை என்பனமுதலானவும் வினையெச்சமென்பாருமுளர். அவற்றுள், செய்தற்கென்பது தொழிற்பெயர்வழி வந்த நான்கனுருபாயும் ஏனைய செய்தவென்னும் காலம்பற்றிய இடப்பொருளுருபாயும் 2அடங்குமெனக்கொள்க.
(பி - ம்.) 1 பாக்குவினையெச்சம் 2 அடங்குமென்பர். | (24) | | | (343) | அவற்றுள் முதலி னான்கு மீற்றின் மூன்றும் வினைமுதல் கொள்ளும் பிறவுமேற் கும்பிற. | எ - ன், வினையெச்சத்திற்கு ஆவதோர்விதியுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) மேற்சொன்ன பன்னிரண்டனுள்ளும் செய்து, செய்பு, செய்யா, செய்யூ என்னும் 1நான்கும் வான் பான் பாக்கென்னும் மூன்றும் வினைமுதல் வினைகொண்டுமுடியும்; ஒழிந்தன ஐந்தும் வினைமுதல் வினையையும் பிறிதின்வினையையும் கொண்டுமுடியும்எ - று.
வ - று. “வாளொடு கனையிருள் வந்து தோன்றினான்” (சீவக. 320), “எண்ணித் துணிக கருமம்” (குறள். 467), “பரீஇ யுயிர்செகுக்கும்” (நாலடி. 220), “ஐவரொடு சினைஇ, | |
|
|