நிலந்தலைக்கொண்ட” (புறநா. 2) 2எ - ம், “புலராப் பச்சிலை யிடையிடுபு தொடுத்த” (புறநா. 33), “தெரிபு தெரிபு சூத்தின வேறு” (கலி. 103) எ - ம், “கல்லாக் கழிப்பர் தலையாயார்” (நாலடி. 366), “3காணாது கழிந்த வைகல் காணா, வழிநாட் கிரங்குமென்னெஞ்சம்” (புறநா. 176), “நிலங்கிளையா, நாணி நின்றோ ணிலை” (அகநா. 16) எ - ம், “படுமகன் கிடக்கை காணூஉ, ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே” (புறநா. 278), “நிலம்புடையூஉ வெழுதரும் வலம்படு குஞ்சரம்” (பதிற். ‘இலங்குதொடி.’) எ - ம் முதலில் நான்கும் வினைமுதலும் இறந்தகாலமும் தழுவின. 4 “கொள்வான் கொடித்தானை கொண்டெழுந்தான்” (பு. வெ. 6 : 5), ஓதுவான்போனான், உறங்குவான்வந்தான் எ - ம், “திருவிற்றான் மாரிகற்பான் றுவலைநாட் செய்ததேபோல்” (சீவக. 2070), உண்பான்வந்தான் எ - ம், “புணர்தரு செல்வந் தருபாக்குச் சென்றார்” (கார். 11), உண்பாக்குச்சென்றான், உண்பாக்குவந்தான் எ - ம் ஈற்றின்மூன்றும் வினைமுதலும் எதிர்காலமும் ஏற்றன. “காந்தளஞ் சிலம்பிற் சிறுகுடி பசித்தெனக், கடுங்கண் யானைக் 5கோடுகொடுத் துண்ணும்” (குறுந். 100, பி - ம்) எ - ம், “கோவா வாரம் வீழ்ந்தெனக் குளிர்கொண்டு, பேஎ நாறுந் தாழ் நீர்ப் பனிச்சுனை” [ “பையுண் மாலை” தொல். களவு, 23 ந. மேற்.] எ - ம் 5எனவெனீறு தன்றொழிலும் பிறிதின்றொழிலும் இறந்தகாலமு மேற்றது. “கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்” (புறநா. 70) எ - ம், “மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து, நோக்கக் குழையும் விருந்து” (குறள். 90) எ - ம் செயவெனெச்சம் இருதொழிலும் நிகழ்காலமுமேற்றது. “தாம்வேண்டி னல்குவர் காதலர் யாம்வேண்டிற், கவ்வை யெடுக்குமிவ்வூர்” (குறள். 1150) எனச் செயினென்னு 7மெச்சமும், “காணியவாநீ வாழிய தோழி” (கலி. 42) எ - ம், “மாணிழை யரிவை காணிய வொருநாட், பூண்க மாளநின் புரவி நெடுந்தேர்” (பதிற். 81) எ - ம், செய்யியவென்னுமெச்சமும், “பசலையுணீயர் வேண்டும்” (குறுந். 27) எ - ம், “கொற்கைச் செழியர் கொங்கர்ப் பணீஇயர், வெண்கோட் டியானைப் போஒர் கிழவோன், பழையன் வேல்வாய்த் தன்ன” (நற். 10) எ - ம் செய்யிய ரென்னுமெச்சமும் எதிர்காலமும் இருதொழிலும் கொண்டன.
‘பிற’ என்ற 8விதப்பினானே சிறுபான்மை தொழிற்பெயர் கொண்டு முடிவனவும் உளவெனக்கொள்க.
வ - று. உண்டுவருதல், உண்குபுவருதல், உண்ணாவருதல், உண்ணூஉவருதல், பசித்தெனஉண்டல், வாழக்கருதல், மழைபெயின் விளைதல், காணியசேறல், மழைபெய்யியரெழுதல், கொள்வான்போதல், உரைப்பான்றொடங்கல், உண்பாக்கிருத்தல், “எரிபுரை யெழிலதாய விளந்தளி ரிரண்டு நாளின், மரகத வுருவ மெய்தி மற்றது பசலை கொண்டு, 9சருகிலை யாகி வீழ்ந்து சரிந்துமண் ணாதல் கண்டும், வெருளிலர் வாழ்துமென்பார் வெளிற்றினை விலக்க லாமோ” (சூளா. துறவு. 7) எனத் தொழிற்பெயரேற்றவாறு.10 | |
|
|