2. - வினையியல்

177

   
     இதுவுமது.

     (இ - ள்.) தத்தம் உருபு ஒன்று ஒன்றாய்த் திரிந்துவருவன உளவேனும்
தம்பொருளிற்றிரியாவாம், வினையெச்சங்கள் எ - று.

     உம்மையால், திரிபு சிறுபான்மையவெனக்கொள்க.

     வ - று. நாயிறுபட்டுவந்தான், கோழிகூவிப்பொழுது 1புலர்ந்தது, “உரற்கா
லியானை யொடித்துண் டெஞ்சிய, யாஅ வரிநிழற் றுஞ்சும்” (குறுந். 232), “செந்நா
யேற்றை கேழ றாக்கி, இரியற் பிணவ றீண்டலிற் பரீஇச், செங்கா யுதிர்ந்த பைங்குலை
யீந்தின்” (அகநா. 21) என்பன 2செயவெனச்சந்திரிந்து செய்தெனெச்சமாய்
வந்தனவேனும் செயவெனெச்சப் பொருளே ஆயினவாறு காண்க. பிறவுமன்ன.

     (பி - ம்.) 1புகுந்தது 2நாயிறுபட, கோழிகூவ, யானையொடித்துண்ண, கேழறாக்க,
எனச் செயவெனச்சந்திரிந்து செய்தெனெச்சமாய் வந்தன வேனுஞ்
செயவெனெச்சப்பொருளேயாகித் தன்றொழிலும் பிறிதின் வினையுமேற்றவாறு காண்க.
பிறவுமன்ன.

(27)

 

(346)

ஆக்க வினைக்குறிப் பாக்கமின் றியலா.

     இதுவுமது.

     (இ - ள்.) ஆக்கப்பொருண்மைக்கண் வரும் வினையெச்சக் குறிப்பு
ஆக்கச்சொல்லினையொழிய வாரா எ - று.

     வ - று. அறங்கேட்டு அருளுடையனாயினான், மருந்துண்டு
நல்லனாயினானெனவரும். ஆயினானென்பது ஆக்கம். “வேங்கையுங் காந்தளு நாறி,
ஆம்பன் மலரினுந் தான்றண் ணியளே” (குறுந். 84), “குருதி படிந்துண்ட காக
முருவிழந்து, குக்கிற் புறத்த சிரல்வாய செங்கண்மால், 1தப்பியா ரட்ட களத்து” (கள. 5)
என்பன செய்யுளாகலான், தொகுக்கப்பட்டனவெனக்கொள்க.

     (பி - ம்.) 1 “பற்றாரை யட்ட களத்து” என்பன........தொக்கு நின் றன.
இவையிலாக்கவினைக்குறிப்புக்கண்டுகொள்க.

(28)

 

(347)

பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையிற்
செல்லா தாகுஞ் செய்யுமென் முற்றே.

     எ - ன், இஃது இவ்வாற்றாற் பொது 1வினையாமென்பது உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) உயர்திணைப் பன்மைப்படர்க்கையிடத்தும் முன்னிலை யிடத்தும்
தன்மையிடத்தும் செய்யுமென்னும் நிகழ்காலமுற்றுவினை ஆகாது எ - று.

     எனவே 1உயர்திணை ஆண்பாலொருமையினும் பெண்பாலொருமையினும்
அஃறிணையொருமையினும் பன்மையினுமாமென்றவாறு.

     உ - ம், அவனுண்ணும், அவளுண்ணும், அதுவுண்ணும், அவை
யுண்ணுமெனவரும்.