178

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     (பி - ம்.) 1வினையென்பதுணர்த்துதல்நுதலிற்று 2உயர்திணைப்படர்க் கையாண்பால்

 (29)

 

(348)

யாரென் வினாவினைக் குறிப்புயர் முப்பால்.

     எ - ன், மேல், இருதிணைக்கும் பொதுவான வினை வினைக்குறிப்பு
உணர்த்தினார்; இதனால், உயர்திணைமுப்பாற்கும் பொதுவான வினைக்குறிப்பு
உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) வினாப்பொருண்மையின்வரும் யாரென்னும் வினைக்குறிப்பு மொழி
உயர்திணைமூன்றுபாற்கும் பொதுவாம் எ - று.

     வ - று. யாரவன், யாரவள், யாரவரென வரும்.

     யாரென்றது எத்தன்மையுடையாரென, வினைக்குறிப்பானது காண்க.

(30)

 

(349)

எவனென் வினாவினைக் குறிப்பிழி யிருபால்.

     எ - ன், அஃறிணை1இருபாற்றாம் பொதுவான வினைக்குறிப்பு உணர்த்துதல்
நுதலிற்று.

     (இ - ள்.) எவனென்னும் வினாப்பொருண்மை வினைக்குறிப்புச்சொல் அஃறிணை
இருபாற்கும்பொதுவாம் எ - று.

     வ - று. எவனது, எவனவை எனவரும்.

     எவனென்றது எத்தன்மையுடையதென வினைக்குறிப்பானது காண்க.2

     (பி - ம்.) 1இருபாற்குமுரியபொது 2இனி, எவன் அவனென உயர்
திணைக்கண்ணுமாமென்க.

(31)

 

(350

வினைமுற் றே1வினை யெச்ச மாகலும்
குறிப்புமுற் றீரெச்ச மாகலு முளவே.

     எ - ன், முற்றுச்சொற்கட்கு எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று.

     (இ - ள்.) முற்றுவினைச்சொல் வினையெச்சமாகி வருதலும் வினைக்
குறிப்புமுற்றுச்சொல் வினையெச்சமாகியும் பெயரெச்சமாகியும் வருதலும் உளவாம் எ-று.

     ‘ஆகலும்’ என்றவும்மையான், அவ்வாறாதல் சிறுபான்மையெனக் கொள்க.

     வ - று. “காணான் கழிதலு முண்டென் றொருநாள்”, “மோயின ளுயிர்த்த
காலை” (அகநா. 5) “முகந்தனர் 2கொடுப்ப வுகந்தனர் பெயரும்” (புறநா. 33),
“*விளிப்பது பயிலுங் குறும்பர்துந் துமியொடு” “எருவினுண்டாது குடைவன வாடி”
(குறுந். 46) 3எ - ம், “பெயர்த்தனென் 4முயங்க யான்” (குறுந். 84),
“மக்களுளிரட்டையாய் மாறினம் பிறந்தியாம்” 5எ - ம், “சேர்ந்தனை சென்மோ
பூந்தார் மார்ப”(‘எம்மூ ரல்ல தூர்நனி’
     * “இளிப்பயி ரிமிருங் குறும்பரந் தூம்பொடு” (மலைபடு. 7) என்று
பத்துப்பாட்டிலுள்ளது.