என்னும் செய்யுள்) “கருங்கோட் டின்னிய மியக்கினிர் கழிமின்” (பெரும்பாண். 392) 1 எ - ம் மூவிடத்து ஐம்பாலினும் வினைமுற்று வினையெச்சமாயின.
“வரிபுனை வில்ல னொருகணை தெரிந்துகொண்டு” (அகநா. 48), “அளிநிலை7பெறாஅ தமரிய முகத்தள், விளிநிலை கேளாள்” (அகநா. 5), “உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து” (முருகு. 185), 8 “விழுமியது கழிவ தாயினும்”, “நிலமிசைப் புரளுங் கைய வெய்துயிர்த்து” (புறநா. 44) எ - ம், “துணையி 9னெஞ்சினேன் றுயருழந் தினைவேன்”, “நீர்வார் கண்ணேந் தொழுதுநிற் பழிச்சி” (புறநா. 113) எ - ம், “நீர்வார் கண்ணை நீயிவ ணொழிய” (குறுந். 22), “வெள்வேல் வலத்திர் பொருடரல் வேட்கையி, னுள்ளினிர் “ (கலி. 4) எ - ம் ஐம்பால் 10மூவிடத்தும் வினைக்குறிப்பு முற்று வினையெச்சக் குறிப்பாயின.
“வெந்துப்பினன் விறல்வழுதி யொடு”, “அஞ்சாயல ளாயிழைமுன்”, “கடற்றானையர் கழல்வேந்தரை”, “பெருவரை மிசையது நெடுவெள்ளருவி” (குறுந். 78) “புன்றா ளோமைய சுரனிறந் தோரே” (குறுந். 260) எ - ம், “பெருவேட்கைய னெற்பிரிந்து”, “கண்புரை காதலே 11மெம்முமுள்ளாள்” எ - ம், “உலங்கொ டோளினை யொருநின்னால்”, “வினை வேட்கையிர் வீரர் வம்மின்”எ - ம் வினைக்குறிப்பு முற்றுக்கள் ஐம்பான் 12மூவிடத்தும் பெயரெச்சவினைக்குறிப்பாயின. இவை இவ்வாறு பெயர் படாதனவெனக்கொள்க.
அஃதேல், முற்று எச்சாமாமென்றது என்னை? எச்சந்தானே பாலும் திணையும் இடமும் விளக்கிற்13றென்ன அமையாதோவெனின், எச்சமாக வோதிய வாய்பாட்டுமொழிகள் வழக்கிடத்தும் செய்யுளிடத்தும் பாலும் திணையும் இடமும் விளக்காது பொதுவாய்நிற்றலானும், இவற்றுட்சில வினையெச்சந்தன்னையேற்று நிற்பனவும் உளவாகலானும் அமையாதென்க.
இவற்றுள், வினையெச்சமாய் வினையேற்றனவும் தம் தொழிலேற்றனவும் ஈண்டுக்காட்டினவற்றுள்ளே காண்க.
இனிப் 14பிறதொழில் கொண்டன வருமாறு: “விண்ணிற் றூவியிட் டான்வந்து வீழ்ந்தன” (சீவக. 894), “கலைத்தொழில் படவெழீஇப் பாடி னாள்கனிந், திலைப்பொழில் குரங்கின வீன்ற தூண்டளிர்” (சீவக. 657), “பாயு மாரிபோற் பகழி 15சிந்தினா, ராயர் மத்தெறி தயிரி னாயினார்” (சீவக. 421), “கானவ ரிரிய வில்வாய்க் கடுங்கணை தொடுத்த லோடு, மானிரை 16பெயர்ந்த தாய ரார்த்தன ரணிந்த திண்டோள், தானொன்று முடங்கிற்றொன்று நிமிர்ந்தது சரம்பெய் மாரி, போனின்ற தென்ப மற்றப் பொருவருஞ் சிலையி னாற்கே” (சீவக. 452), “செய்யோன் செழும்பொற் சரஞ் சென்றன சென்ற தாவி” (சீவக. 2322) எனக்காண்க. பிறவுமன்ன.
(பி - ம்.) 1 வினையெச்சமாதலும் 2 கொடுப்ப” என உயர்திணை முப்பாலும், “விளிப்பதும் பயிரும் 13என அஃறிணையிருபாலும் பெயர் 4முயங்குகையான்” 15எனத் தன்மையிடத்து ஒருமைபன்மையும், “நீ சேர்ந்தனை என முன்னிலையொருமைபன்மையுமாகிய மூவிடத்தைம்பால் வினைமுற்று | |
|
|